Connect with us
boomerang-movie

அந்த விஷயத்தில் ரஜினி,அஜித்தான் பெஸ்ட்-மனம்திறந்த நயன்தாரா

News | செய்திகள்

அந்த விஷயத்தில் ரஜினி,அஜித்தான் பெஸ்ட்-மனம்திறந்த நயன்தாரா

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்றே கூறிவிடலாம். அந்த அளவிற்கு தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்.

நயன்தாரா கைவசம் 8 படங்கள் உள்ளது தாஸ் ராமசாமியின் ‘டோரா’ படத்திற்கு பிறகு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா கைவசம், அதர்வாவின் ‘இமைக்கா நொடிகள்’, சக்ரி டோலட்டியின் ‘கொலையுதிர் காலம்’, கோபி நயினாரின் ‘அறம்’, நிவின் பாலியின் ‘லவ் ஆக்ஷன் டிராமா’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, நெல்சன் திலீப்குமாரின் ‘கோ கோ’, அறிவழகன் படம், கே.எஸ்.ரவிகுமார் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இதில் ‘அறம்’ படத்தில் நயன்தாரா கலெக்டராக வலம் வரவுள்ளாராம். மேலும், ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ் – ரமேஷ், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கோபி கிருஷ்ணா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘KJR ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் கோட்டப்பாடி. ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். ஏற்கெனவே, படக்குழுவால் டிவிட்டப்பட்ட பாடல்களும், ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் டிவிட்டிய ஃபர்ஸ்ட் லுக் டீஸரும் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. சமீபத்தில், படத்தின் சேட்டிலைட் உரிமையை ‘சன் டிவி’யும், வெளியீட்டு உரிமையை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனமும் கைப்பற்றியது. தற்போது, படத்தை பார்த்த சென்சார் குழுவினர் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்ததோடு, படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளனர். படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

ஹீரோயினுக்காக படங்கள் பார்க்க வருபவர்கள் குறைவு, அந்த குறையை தீர்த்தவர் நயன்தாரா தான், இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.nayanthara

அதில் இவர் தன்னுடன் நடித்த நடிகர்கள் குறித்து பேசினார், அப்போது அஜித் குறித்து கூறுகையில் ‘நான் பார்த்த நடிகர்களில் பெண்களுக்கு மிகவும் மரியாதை தரக்கூடிய நடிகர்கள் ரஜினி சாரும், அஜித் சாரும் தான்.

அதிலும் அஜித் சார் பில்லா நடிக்கும் போது நான் பெரிய ஸ்டார் எல்லாம் இல்லை, ஆனால், அஜித் உச்சத்தில் இருக்கின்றார்.

அஜித் ஒரு இடத்தில் கூட தான் பெரிய நடிகர் என்று காட்டியதே இல்லை, எல்லோரையும் சரி சமமாக தான் நடத்துவார்’ என்று கூறியுள்ளார்.Nayanthara_Take_Risk

பில்லா 2007 அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு, நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும். இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

இதன் முக்கிய கட்டங்கள் மலேசியாவின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன. இப்படம் 2006-ல் வெளியான வரலாறு பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top