Sports | விளையாட்டு
இந்தியாவிற்கான சிறந்த நம்பர் 4 பேட்ஸ்மேன் – இந்த ஐவரில் ஒருவர் தான் பெஸ்ட் சாய்ஸ். என்ன நாம் சொல்வது, சரிதானே ?
இன்று இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் கிரிக்கெட் உலகக்கோப்பை பைனலில் ஆட உள்ளனர்.
போட்டிகள் துவங்கும் முன்பே கப் அடிக்க ஹாட் பாவரிட் டீம்களில் ஒன்று. லீக் போட்டிகளில் அசத்திய இந்திய அணி, செமி பைனலில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இம்முறை நாம் கப் ஜெயிக்காமல் வெளியேறியதற்கு மத்திய வரிசை சொதப்பத்தியே காரணம் என வல்லுநர்கள் பலரும் கரணம் தெரிவித்து வருகின்றனர்.
நம்பர் 4 – இந்த இடம் தான் இந்திய டீமுக்கு பெரிய இடையூறு. உலககோப்பைக்கு இரண்டு வருடம் முன்பு இருந்தே இந்த ஸ்பாட் தான் இந்திய பேட்டிங்கின் வீக் – லிங்க். யுவராஜ் சிங் ஓரங்கட்ட பட்டபின் நிலையான நம்பர் 4 கிடையாது . அம்பதி ராயுடு தொடங்கி ரிஸப் பன்ட் வரை வந்து நின்றுள்ளது இந்த பிரச்சனை.
இந்த ஸ்பாட்டில் ஆட சிறந்தவர் யார், என நமது அலசலை பார்ப்போம்.
விஜய் ஷங்கர் –

vijay-shankar-world-cup-india-pakistan-match-2019
விஜய் ஷங்கர் முப்பரிமாணம் உள்ள வீரர் என்பதால் ராயுடுவுக்கு பதில் அவருக்கு உலகக்கோப்பை டீம்மில் வாய்ப்பு சென்றது. அருமையான பீல்டர், நல்ல பேட்ஸ்மான் அதுமட்டுமன்றி பந்துவீச்சும் பிளஸ். நல்ல பேக்கேஜ் தான், எனினும் போதுமான அளவு சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லை. வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டால், கட்டாயம் அந்த இடத்தை தன் வசமாக்குவார்.
ரவீந்திர ஜடேஜா –

jaddu
இந்திய நிர்வாகம், யோசிக்காத ஒரு சாய்ஸ். எனினும் செமி – பைனல் முடிந்த பின் இந்த யோசனை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். யுவராஜ் சிங் இடத்திற்கு ஏற்றவர் தான். யார் யாருக்கோ வாய்ப்பு கொடுத்த நிர்வாகம், இவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்தால் சிறப்பாக செயல் பட வாய்ப்புள்ளது. உள்ளூர் போட்டிகளில் ட்ரிபிள் செஞ்சுரி அடித்து அசத்தியவர் ஆயிற்றே. அதிக ஊக்கமும் கொஞ்ச கால அவகாசமும் கொடுக்கும் பட்சத்தில் நிச்சயம் சாதிப்பார்.
அஜின்கியா ரஹானே –

rahane
டெஸ்ட் போட்டிகளில் இந்திய டீம்மின் முதுகெலும்பு. ராகுல் டிராவிட் பாணியில் நின்று ஆடுபவர். எனினும் ஸ்ட்ரிக் ரெட் காரணமாக இவர் ஓரங்கப்பட்டார் டீம்மிலிருந்து. இவர் மட்டும் டீம்மில் இருந்திருந்தால், யாருக்கு தெரியும் இன்று பைனல் கூட நாம் ஆடியிருப்போம். தவானுக்கு காயம் ஏற்பட்ட பொழுதே இவரை சேர்த்திருந்தால் துவக்க பேட்ஸ்மேன் ஆகவும் ஆட வைத்திருக்கலாம். வெளிநாட்டு பிச்சுகளில் ஜாம்பவான் ரஹானே. இதுவரை 95 போட்டிகளில் ஆடி 35 சராசரி வைத்துள்ளார். ஸ்ட்ரிக் ரேட் 78 என்பது தான் மைனஸ். ஆனால் இது போன்ற டெக்கனிகளாக ஸ்ட்ராங் வீரரும் தேவை தான் டீம்மில். எனினும் இன்று 31 வயதில் உள்ள இவருக்கு, இனியும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
மனிஷ் பாண்டே –

MS-Dhoni-and-Manish-Pandey
தன் இளம் வயதில் ஐபில் போட்டியில் சத்தம் அடித்த முதல் இந்திய வீரர். கர்நாடக டீம்மின் மத்திய வரிசை இவரை நம்பி தான் என்றால் அது மிகையாகாது. ஐபில் போட்டிகளிலும் ஸ்டார் வீரர் தான். அதுமட்டுமன்றி இந்தியாவிற்காகவும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக ஆடியவர். 23 போட்டிகளை ளிவரது சராசரி 36 , ஸ்ட்ரிக் ரேட் 92 க்கு அருகில். வயதும் இன்றைய தேதிக்கு 29 தான். தேர்வாளர்கள் தான் சிந்திக்க வேண்டும்.
ஷ்ரேயாஸ் ஐயர் –

shreyas-iyer
தன் ஸ்ட்ரோக் ப்லேவால் அசத்தும் 24 வயது வாலிபர்.பேட்டிங்கை பொறுத்தவரை அணைத்துமே பிளஸ் தான். மும்பையில் தன் கிரிக்கெட் வித்தையை கற்றவர். ஐபில் இல் டெல்லி டீம்மின் கேப்டன். மூன்றாம் இடத்தில் பேட்டிங் ஆடுவது இவரின் பிளஸ். விரேந்தர் ஷேவாக்கிடம் நாம் பார்த்த அந்த ஸ்பீட் மனிதரிடம் உண்டு. மேலும் கேப்டன்சி மெட்ரியல். விராட் கோலிக்கு துணைக்கேப்டனாக நியமித்தால், வருங்காலத்தில் இந்திய டீம்மின் தலைமை பொறுப்பையும் ஏற்க ரெடி ஆகி விடுவார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
