தமிழ் சினிமாவில் நல்ல நடிகை என்று பெயரெடுத்து பின்னாளில் வாய்ப்பில்லாத காரணத்தால் கவர்ச்சி காட்டி அசிங்கப்பட்டு பரிதாப சூழ்நிலையில் தள்ளப்பட்ட நடிகைகள் குறித்து சற்று பார்ப்போம்.

நந்தகி:

actress

அவள் பெயர் தமிழரசி படத்தில் தோழியாக, காதலியாக, விரக்தி அடைந்த பாலியல் தொழிலாளியாக என பல பரிணாமங்களில் தனது நடிப்பை காட்டி அசத்தியவர் நந்தகி. இவரது இயற்பெயர் மனோசித்ரா. இவரது பொல்லாத காலம் முதல் படத்திற்கு பிறகு எந்த வாய்ப்பும் இல்லாமல் கவர்ச்சி காட்டி இறுதியில் அதுவும் கைகொடுக்காமல் காணாமல் போனார்.

கஸ்தூரி:

kasturi

சத்யராஜ், பிரபு, கமல் போன்ற நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை. இன்று தனது கருத்துக்களால் பிரபலமடைந்திருக்கும் இவர் சில ஆண்டுகள் முன்பு வாய்ப்பில்லாததால் தமிழ் படம் என்னும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும், நாங்க என்னும் படத்தில் ஆபாசமாகவும் நடித்து தனது மார்க்கெட்டை மீட்க நினைத்தார். ஆனால் பலிக்கவில்லை.

மஞ்சுளா:

manjula

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி என பலருடன் நடித்தவர், பிற்காலத்தில் நடிகர் விஜயகுமாரை மணந்தவர். இருப்பினும் திருமணத்திற்கு முன்பு பட வாய்ப்புகள் அமையாததால் எல்லை மீறிய கவர்ச்சி காட்டினார். ஆனால் இவரை குழந்தை நட்சத்திரமாக ஆதரித்த தமிழ் சினிமா கவர்ச்சி நடிகையாக அங்கீகரிக்கவில்லை.

மோனிகா

monika

இந்திரா படத்தில் நிலா காய்கிறது என்று நம் மனதை வருடிய குழந்தை நட்சத்திரம் மோனிகா பின்னாளில் சிலந்தி என்னும் படத்தில் பயங்கர கவர்ச்சி காட்டியும், பிறகு நடிகர் விக்னேசுடன் ஒரு படத்தில் கவர்ச்சி காட்டியும் நடித்தார். ஆனால் இவரை கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை தமிழ் திரையுலகம்.

விந்தியா:

vidya

சங்கமம் படத்தின் மூலம் அறிமுகமானவர். முதற்படமே ரகுமானின் இசை, சூப்பர் ஹிட் பாடல்கள் என்று அனைத்தும் அமைந்தது இவருக்கு. ஆனால் பின்னாளில் படமில்லாமல் ரெட் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ஆரம்பித்தார். பிறகு சில படங்களில் குத்தாட்டம் போட்டும் வயசு பசங்க என்னும் படத்தில் ஆபாசமாக நடித்தும் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். சினிமா உலகம் மட்டுமல்ல இவரது திருமண வாழ்வும் பரிதாபமாகவே அமைந்தது இவருக்கு.

பியா பாஜ்பாய்:

piya

பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் அறிமுகமானவர். தல அஜித், ஜீவா போன்ற நடிகர்களுடன் நடித்து அவரது குழந்தைதனமான குறும்பின் மூலம் நம் வீட்டு பெண் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். ஆனால் கோ படத்திற்கு பிரவு சரிவர வாய்ப்பின்றி பிறகு கவர்ச்சி களத்தில் இறங்கிவிட்டார். இன்று வரை கவர்ச்சி போராட்டத்தில்தான் இருந்துவருகிறார். ஆனால் வெற்றி பெற அது மட்டுமே வழி அல்லவே.