அபிராமியை தொடர்ந்து வெளியேறும் அடுத்த பைனல் லிஸ்ட்.. யாருக்கும் நடக்காத அநியாயம்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இன்னும் ஒரு சில தினத்தில் நிறைவடைய உள்ளது. எனவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல் லிஸ்ட் ஆக இருக்கும் பாலாஜி முருகதாஸ், தாமரைச்செல்வி, ரம்யா பாண்டியன், ஜூலி, நிரூப் இவர்களுள் யார் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்பதற்கான கடும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் ஒரு நபர் எலிமினேட் ஆக வேண்டும் என்பதால்,  இந்த ஐந்து பேருக்கும் மக்கள் தங்கள் ஓட்டுக்களை அளித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் ஜூலி மக்களிடமிருந்து குறைந்த ஓட்டுக்களைப் பெற்று எலிமினேட் செய்யப்பட உள்ளார்.

இவர் எலிமினேட் செய்யப்படும்போது மற்ற போட்டியாளர்களை தனித் தனி அறையில் அடைத்து வைத்து ஜூலியை மட்டும் யாருக்கும் தெரியாமல் வெளியில் இருந்து ஒரு நபர் உள்ளே வந்து ஜூலியை அழைத்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

ஏனென்றால் பட புரமோஷனுக்காக உள்ளே வரும் விருந்தினர்களை கூட போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் வழியனுப்பும் நிலையில், இவ்வளவு நாள் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடித்த ஜூலியை மற்ற போட்டியாளர்களை கடைசி கடைசியாக பார்க்கவிடாமல் எலிமினேட் செய்தது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏற்கனவே பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியில் ஜூலி ரசிகர்களின் மத்தியில் நெகட்டிவ் கமெண்டுகளை பெற்றாலும், பிக்பாஸ் அல்டிமேட்டில் அவரால் முடிந்த அளவுக்கு சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். அதன் காரணமாகவே இவ்வளவு நாள் பிக்பாஸ் வீட்டில் ஜூலியால் இருக்க முடிந்தது.

மீதமிருக்கும் பாலாஜி முருகதாஸ், தாமரைச்செல்வி, ரம்யா பாண்டியன், நிரூப் ஆகிய நான்கு பேரில் யார் வெற்றியாளர் என்பதை ரசிகர்கள் யூகித்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் பெரும்பாலோனோர் பாலாஜி முருகதாஸ் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என கணித்திருக்கின்றனர்.