Connect with us
Cinemapettai

Cinemapettai

Baakiyalakshmi-gopi-bhagya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எவ்வளவு கேவலப்பட்டாலும் அசராத கோபி.. நிம்மதியை இழந்த பாக்கியலட்சுமி குடும்பம்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கணவர் கோபி ராதிகாவுடன் தொடர்பில் இருக்கும் விஷயம் தெரிந்ததும், 25 வருடம் கூட வாழ்ந்த மனைவி பாக்யாவால் அதைக் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருக்கும் மாமனார், மாமியார், மகள் இனியா ஆகியோர் அனைவரும் நிம்மதியை இழந்து பாக்யாவை நினைத்து கவலைப்படுவதால் அவரை  சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என கோபி முடிவெடுக்கிறார்.

அப்பொழுதுதான் இந்த பிரச்சினை தற்காலிகமாக முடிவடையும் என்பதனால் பாக்யாவை கோபி சந்திக்கிறார். இவ்வளவு நடந்தும் பாக்யாவிடம் மன்னிப்பு கேட்காத கோபி, அவரிடம் சரணடைந்தோ அல்லது மண்டியிட்டு கெஞ்சவோ வரவில்லை என்று திமிருடன் பேசுகிறார்.

மேலும் கோபி செய்தது தவறு என்பதை ஒத்துக் கொண்டாலும், இவ்வளவு நாள் பாக்யாவுடன் பிடிக்காத வாழ்க்கையை தான் வாழ்ந்ததாகவும், ராதிகாவை பார்த்ததும் கோபியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு கனவு இருந்தது. அது மீண்டும் துளிர் விட்டதாக சொல்கிறார்.

மனைவியாக பாக்யா குடும்பத்தை மட்டுமே யோசித்துக்கொண்டிருந்தால், கோபியின் மனம் வேறொரு பக்கம் சென்று விட்டதாக படு கேவலமாக தன்னை நியாயப்படுத்துகிறார். மேலும் ‘மகள் இனியவை ஏன் தண்டிக்க நினைக்கிறாய். அவளது மனம் நீ இல்லாமல் கஷ்டப்படும் என்பதை புரிந்து கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டாய்’ என பாக்யாவை கோபி சமாதானப்படுத்துவது போல் அவர்மீது தான் தப்பு இருப்பதாக பேசுகிறார்.

இருப்பினும் இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அமைதியாக நின்ற பாக்யா, இதுவரை செய்த தப்பை இனிமேல் செய்யமாட்டேன் என உத்தரவாதம் கொடுத்து சத்தியம் செய்யுங்கள் என்று கோபியிடம் கேட்கிறார்.

எவ்வளவு கேவலப்பட்டாலும் அசராத கோபி, மனம் முழுவதும் ராதிகாவை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால் பாக்யாவிடம், ‘நீ கண்டிப்பாக வீட்டிற்கு வர வேண்டும். நீ தான் என்னோட வாழ்க்கை ராதிகா’ என வாய் தவறி ராதிகாவின் பெயரை உச்சரித்து சத்தியம் செய்யும்போது மாட்டிக்கொண்டார். இதனால் மேலும் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பாக்யா கோபியுடன் வீட்டிற்கு செல்ல மறுத்து விடுவார்.

Continue Reading
To Top