சட்டசபை வளாகம் அமைந்துள்ள‌ செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிப்பார்க்க வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வருவது வழக்கம்.

இன்று, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிப்பார்க்க வந்தனர்.

அப்போது சட்டசபை நிகழ்வுகளை கவரேஜ் செய்ய பத்திரிகைக்காரர்களுக்குத் தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டனர்.

அங்குள்ள பத்திரிகையாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, மைக்கை தூக்கியடிப்பது போன்ற குசும்புகளுக்கு அங்கே ட்ரம்ப்! இங்கே அதுபோல யாரும் இருக்கிறார்களா என்று கேட்டார்கள்.

சொல்லவா வேணும், நம்ம கேப்டன் விஜயகாந்தைப் பற்றிச் சொன்னவுடன் பரவசம் ஆனார்கள்.

“அவர் வந்திருக்கிறாரா?” எனக் கேட்க , போன வருடம் வந்திருந்தால் லைவ் ஆக்‌ஷனைப் பார்த்திருக்கலாம் என்றவுடன், ஏமாற்றத்துடன் திரும்பினர்.