அயலான் வெற்றியால் தாறுமாறாக உருவாகும் SK25.. VFX-க்கு மட்டும் இத்தனை கோடி பட்ஜெட்டா.?

Sivakarthikeyan – Ayalaan : சிவகார்த்திகேயனின் அயலான் படம் இந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. அயலானுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் வெளியாகிவிட்டது. 6 வருடங்களாக அயலான் படத்தை ரிலீஸ் செய்ய சிவகார்த்திகேயன் போராடி அதில் இப்போது வெற்றியும் கண்டிருக்கிறார்.

இந்த சூழலில் 12 நாட்களில் 75 கோடியை தாண்டி அயலான் படம் வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயனுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. இப்போது ரவிக்குமார் இயக்கத்தில் விரைவில் அயலான் படம் உருவாக இருக்கிறது. இப்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

அடுத்தபடியாக சிவகார்த்திகேயனின் 23 வது படத்தை ஏ ஆர் முருகதாஸ் என்டர்டைன்மெண்ட் படமாக இயக்க இருக்கிறார். இப்போது அயலான் 2:படத்திற்கான கையெழுத்து ஜனவரி 18ஆம் தேதி போடப்பட்டிருக்கிறது. இப்படத்தை phantom fx உடன் இணைந்து கேஜிஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

Also Read : சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்ட விஜய் டிவி பிரபலம்.. நேரில் கூட பேசாமல் அசிங்கப்படுத்திய சம்பவம்

மேலும் இந்த படத்தின் விஎப்எக்ஸ் மற்றும் சிஜி தொழில்நுட்பத்திற்காக ஆரம்பம்கட்ட பட்ஜெட்டில் 50 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறதாம். ஆகையால் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அயலான் படத்தின் விஷுவல் காட்சிகள் அமையும் என்று கூறப்படுகிறது.

காத்திருந்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்பதற்கு இணங்க இப்போது அயலான் படம் தாமதமாக ரிலீசானாலும் சிவகார்த்திகேயனுக்கு கை மேல் பலன் கொடுத்திருக்கிறது. ரவிக்குமார் அயலான் 2 பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார். சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ayalaan-phantomfx
ayalaan-phantomfx

Also Read : மீண்டும் கடனாளியான சிவகார்த்திகேயன்.. ஏலியன் கூடவே போயிற வேண்டியதான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்