fbpx
Connect with us

நெல் கொள்முதல் மீது குற்றம்சாட்டிய எதிர்கட்சி.. புள்ளி விவரத்தோடு தக்க பதிலடி கொடுத்த அதிமுக அமைச்சர்

edappadi

Tamil Nadu | தமிழ் நாடு

நெல் கொள்முதல் மீது குற்றம்சாட்டிய எதிர்கட்சி.. புள்ளி விவரத்தோடு தக்க பதிலடி கொடுத்த அதிமுக அமைச்சர்

தமிழக வரலாற்றிலேயே அதிக பட்ச நெல் கொள்முதல் செய்து, எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் அதிமுக அரசு சாதனை புரிந்து வருகிறது.

அப்படி இருக்கும் நிலையில் ஸ்டாலின் “ஒரு நேரடி கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1000 நெல் மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்கிறது.

மேலும் ஒரு கொள்முதல் நிலையத்தில் நெல் வரத்து அதிகம் இருக்கும் பட்சத்தில் ஆட்சியர் நெல் கொள்முதல் நிலையத்தை அதிகப்படுத்த அதிகாரம் இருந்தாலும் அதை செய்ய அரசு அதிகாரிகள் மறுக்கின்றனர்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜர் நெல் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை பட்டியலிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடத்தில் மட்டும் 28 நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு பதில் சுமார் 7,037 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அது இல்லாமல் 1.10.2020 தேதியன்று தொடங்கப்பட்ட 2020-21 பருவ கொள்முதல் காலத்தில் குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு குவிண்டாலுக்கு தன்னகரத்திற்கு ரூ.1835 – ரூ.1888 என்ற விலை நிர்ணயமும், சாதாரண ரகத்திற்கு ரூ.1815 – ரூ.1860 என்ற விலையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

அது மட்டும் மாநில அரசு தன்னகரத்திற்கு ரூ. 70 அதிகமாகவும் சாதாரண ராகத்திற்கு ரூ.50 கூடுதலாகவும் விவசாயிகளுக்கு வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகளின் நலன் கருதி சிறப்பாக நெல் கொள்முதல் செய்ய அதிமுக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் கள நிலவரத்தை ஆராயாமல் கண்டபடி உளறிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்று உணவுத்துறை அமைச்சர் திரு. காமராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top