Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷூட்டிங்கிற்காக பைக்கில் சென்ற நடிகைக்கு நேர்ந்த கதி…

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தனது உதவியாளருடன் பைக்கில் சென்ற நடிகை கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பீகாரின் மேற்குப் பகுதி, உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதி மாவட்டங்கள் மற்றும் நேபாளத்தில் மாதேஷ் ஆகிய பகுதிகளில் பேசப்படும் மொழி போஜ்பூரி. இந்த மொழிக்கென தனி சினிமாத் துறை இருக்கிறது. சிறிய பட்ஜெட்டில் இந்த மொழியில் எடுக்கப்படும் திரைப்படங்கள், அவற்றின் மேக்கிங் மற்றும் கதையம்சத்துக்காக தேசிய அளவில் பேசப்படும் படங்களாக வலம் வருகின்றன.

போஜ்பூரி சினிமா துறை தற்போது வளர்ச்சி பெற்று ரூ.2,000 கோடி மதிப்பிலான துறையாக வளர்ந்து நிற்கிறது. ஆசியாவில் பல நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த படங்கள் தற்போது திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

போஜ்பூரி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் மணீஷா ராய். விருது விழாக்களில் கௌரவரவிக்கப்பட்ட கோபார் என்ற குறும்படத்திலும் இவர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பால் அந்த குறும்படம் பல்வேறு விருது விழாக்களில் திரையிடத் தேர்வானது.
இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் சித்தௌனி கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த மணீஷா ராய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து பேசிய காவல்துறை எஸ்.பி. கங்குலி, தனது உதவியாளர் சஞ்சீவ் மிஸ்ராவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த மணீஷ் ராய் என்ற போஜ்பூரி நடிகை சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர்கள் சென்று கொண்டிருந்த பைக் மீது கார் மோதியதில், அவர்கள் இருவரும் தூக்கி வீடப்பட்டனர். இதில், மணீஷ் ராய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உதவியாளர் சஞ்சீவ் மிஸ்ரா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அதேநேரம், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநருடன், காருடன் சம்பவ இடத்திலிருந்து தப்பியிருக்கிறார்.

அவரைத் தேடும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார். சத்தௌனி கிராமத்துக்கு அருகில் நடைபெற்று வந்த ஷூட்டிங்கிற்காக நடிகை மணீஷ் ராய் பைக்கில் சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top