கூண்டுக்கிளியாக மாறிய நடிகை.. நடிகரின் அரவணைப்பில் சொகுசாக இருக்கும் அம்மணி

Gossip: புதுப்புது நடிகைகளின் வரவுகளால் திரையுலகமே தடுமாறிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் உஷாராக இல்லை என்றால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட வேண்டிய நிலைமை ஹீரோயின்களுக்கு வந்துள்ளது.

அதனாலேயே தற்போது இளம் நடிகை ஒருவர் பிரபல நடிகரை கெட்டியாக பிடித்துக் கொண்டாராம்.. வந்த புதிதில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிசியாக இருந்த நடிகை தற்போது பிரபலம் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இருவரும் ஒரு படத்தில் ஒன்றாக நடித்த நிலையில் தற்போது நடிகை முழுவதும் நடிகரின் ஆதரவில் தான் இருந்து வருகிறாராம். அவருக்கு எந்த குறையும் வைக்காமல் அரவணைத்து சொகுசாக பார்த்து வருகிறாராம் அந்த ஹீரோ.

சொகுசாக வாழும் ஹீரோயின்

ஆனால் இந்த விவகாரம் நடிகரின் வீட்டுக்கு தெரியவந்ததில் மனைவி பத்திரகாளியாக மாறி இருக்கிறார். சத்தம் இல்லாமல் இது உண்மைதானா என விசாரித்ததில் கணவரின் சில்மிஷ வேலைகள் அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

இதை வைத்து பார்க்கும் போது எப்போது வேண்டுமானாலும் இந்த பஞ்சாயத்து பூதாகரமாக வெடிக்கும் என்கின்றனர். ஆனால் நடிகருக்கு இதை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற சூட்சுமம் தெரியும்.

அதனால் எப்படியும் மனைவியை சரி கட்டி விடுவார் என சத்தம் இல்லாமல் கிசுகிசுத்து வருகின்றனர். ஆனால் ஒன்றுமே தெரியாமல் அப்பாவி போல் இருந்த நடிகை இப்படி ஒரு வேலையை சைலன்டாக பார்த்திருப்பது தான் நம்ப முடியாத அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நடிகரின் கண்ட்ரோலில் இருக்கும் ஹீரோயின்

- Advertisement -spot_img

Trending News