Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
வீட்டையே பார் ஆக்கிய நடிகை.. திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாமனார்

அக்கட தேசத்திலிருந்து வந்த நடிகை ஒருவர் இங்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சியம் ஆகிவிட்டார். அதற்கு காரணமாக இருந்த இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர்களது திருமணம் நீண்ட நாள் நீடிக்காது என்று பலர் கூறி வந்தனர். மேலும் இயக்குனர் சைக்கோ மாதிரி அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று நட்பு வட்டாரமும் கூறியுள்ளது.
ஆனால் காதலுக்கு கண் இல்லை என்பது போல நடிகை இயக்குனரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்பதில் உறுதியாக இருந்து முடித்துக் காட்டிவிட்டார். ஆனால் அதுவே நடிகைக்கு பின்னாளில் மிகப்பெரிய பிரச்சனையாக வந்து முடிந்தது. அதாவது நடிகை திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலை காட்டக் கூடாது என கண்டிஷன் போடப்பட்டிருந்தது.
Also Read : இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்புகளை வாரிய நடிகை.. திருமணத்திற்கு பின் சந்தி சிரித்த லீலைகள்
ஆனால் சினிமாவில் நடிக்க மிகவும் ஆசை இருந்ததால் தனது கணவரிடம் இது குறித்து பேசி இருக்கிறார். ஆனால் தன்னுடைய மனைவி வேறு ஒருவருடன் நடிக்க விருப்பமில்லாத காரணம் மட்டுமின்றி குடும்பத்தின் பேச்சையும் மீற முடியாத காரணத்தினால் இயக்குனர் நடிகையை சினிமாவில் நடிக்க வைக்க சம்மதிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அடிக்கடி வீட்டுக்குள் பிரச்சனை வெடித்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே நடிகைக்கு மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதன் பிறகு கணவனின் குடும்பத்தில் பிரச்சனை காரணமாக மீண்டும் அந்தப் பழக்கங்களை அதிகமாக்கிக் கொண்டு எந்த நேரமும் போதையிலேயே இருந்துள்ளார்.
அதுமட்டும்இன்றி குடியிருக்கும் வீட்டையே பாராக்கி உள்ளதால் மாமனாருக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் சண்டை முற்றி போக ஒரு கட்டத்தில் நடிகையை இயக்குனர் விவாகரத்து செய்து விட்டார். ஆனாலும் நடிகை தற்போது வரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாடி வருகிறார்.
Also Read : உங்களால தான் கர்ப்பம் ஆகிட்டேன் என வளைத்து போட நினைத்த வாரிசு நடிகை.. சூழ்ச்சிக்கு ஆப்பு வைத்த ஹீரோ
