பார்ட்டிக்கு வர மாட்டேன்னு முரண்டு பிடித்த நடிகை.. திட்டம் போட்டு பழி தீர்த்த முதலாளி

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் எல்லாம் சுகபோகமாக வாழ்கிறார்கள் என்ற கருத்து இருக்கிறது. அது ஒரு பக்கம் உண்மையாக இருந்தாலும் அவர்கள் படும் அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

அதிலும் லைம் லைட்டில் ஜொலிக்கும் நடிகைகளுக்கு எல்லா பக்கம் இருந்தும் டார்ச்சர் வந்து கொண்டே இருக்கும். அப்படித்தான் பாலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த நடிகைக்கு ஒரு அவமானம் ஏற்பட்டது.

டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இந்த ஏழு எழுத்து நடிகை அழகும் திறமையும் கொண்டவர். அதனாலேயே பல பெரிய நிறுவனங்கள் இவரை தங்கள் படங்களில் புக் செய்வது உண்டு.

அதேபோல் பெரும் புள்ளிகள் நடத்தும் பார்ட்டிகளிலும் இவருக்கு அழைப்பு வருமாம். அப்படித்தான் ஒற்றை எழுத்து பிரபல நிறுவனம் நடத்திய பார்ட்டிக்கு அழைப்பு வந்திருக்கிறது.

ஆனால் நடிகை அதில் கலந்து கொள்ள மறுத்து விட்டாராம். இதனால் கோபமடைந்த அந்த முதலாளி நடிகையை பழிவாங்க திட்டம் போட்டு இருக்கிறார்.

அதற்காகவே ஒரு படத்தை எடுக்க முன் வந்திருக்கிறது அந்த நிறுவனம். அதில் ஹீரோயினாக நடிக்க இந்த நடிகையை புக் செய்து இருக்கிறார்கள். நடிகையும் அதை நம்பி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று இருக்கிறார்.

ஆனால் அங்கு ஏற்கனவே மூன்று ஹீரோயின்கள் இருந்தனர். அவர்களுடன் இந்த நடிகையை ஒரு பாடலுக்கு ஆட சொல்லி இருக்கிறார்கள். அதன் பிறகு அவ்வளவு தான் என பணத்தை கொடுத்து அனுப்பி விட்டார்களாம்.

இதனால் அவமானம் அடைந்த நடிகை சில நாட்கள் வீட்டை விட்டு வெளியில் வரவில்லையாம். ஏனென்றால் அப்படத்தில் நடிகை இருந்த இடம் தெரியாமல் இருந்திருக்கிறார். இப்படி பிளான் பண்ணி நடிகையை அவமானப்படுத்தி விட்டது அந்த நிறுவனம்.

Next Story

- Advertisement -