புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

கல்யாணத்துக்கு தயாராகும் ஸ்வீட் நடிகை.. 40 வயதில் புளியங்கொம்பாக பிடித்த அழகி

Gossip: 40 வயதை கடந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நடிகை இப்போது குடும்ப வாழ்க்கைக்கு ஓகே சொல்லிவிட்டாராம். ரொம்ப நாட்களாகவே நடிகையின் பெற்றோர்கள் அவரை சம்மதிக்க வைக்க போராடி வந்தனர்.

ஆனால் எதற்கும் பிடி கொடுக்காமல் இருந்த நடிகை தற்போது மனம் மாறி இருக்கிறாராம். கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்து இருக்கிறார்.

அவர் சம்மதம் சொன்னதே போதும் என சூட்டோடு சூடாக பெற்றோர்களும் பெரிய தொழிலதிபரை பார்த்து பேசி முடித்து விட்டார்களாம். விரைவில் நடிகையின் கல்யாண செய்தி வரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

ஸ்வீட் நடிகையின் திடீர் முடிவு

ஏற்கனவே நடிகை ஸ்டைலிஷ் நடிகரை காதலிப்பதாக ஒரு தகவல் பரவி வந்தது. அதற்கேற்றார் போல் அந்த ஜோடியும் பொது இடங்களில் ரொம்பவே நெருக்கம் காட்டி வந்தனர். இதனால் விரைவில் கல்யாண செய்தியை அறிவிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இடையில் என்ன நடந்ததோ இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து விட்டனர். அதைத்தொடர்ந்து நடிப்பில் பிசியான நடிகர் இளம் நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்வதாக பேசப்பட்டது.

நடிகையோ வாய்ப்புகள் இல்லாமல் சில காலம் அமைதியாக இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கும் அவர் காதல் கத்திரிக்காய் எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டு குடும்ப பந்தத்தில் இணைவதற்கு தயாராகி விட்டார்.

40 வயதில் திருமணத்திற்கு தயாரான நடிகை

- Advertisement -spot_img

Trending News