100 கோடி பட்ஜெட், 3 கோடி வசூல்.. துணிச்சலுடன் நடிகை எடுத்த அதிரடி முடிவு!

சமீபகாலமாகவே வாயைத் திறந்தாலே சர்ச்சை என்ற அளவிற்கு சமூக வலைத்தளங்களில் சினிமா மற்றும் அரசியல் ரீதியாகவும் பலரை பகைத்துக் கொண்டு, கடுமையான விமர்சனங்களை அவ்வப்போது வைக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தன்னுடைய திறமையான நடிப்பினால் இதுவரை சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றவர்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தாகத்’ திரைப்படம் 100 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெறும் மூன்று கோடிக்கு மட்டுமே வசூல் செய்து இந்தப் படம் பெரும் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த படம் ரிலீசான 8-வது நாளில் வெறும் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்றது பெரும் அவலம்.

தற்சமயம் இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து பிளாக் ஆகி வருவதற்கு இவரது நடிப்பில் தான் பிரச்சினையா அல்லது படத்தை ஓடவிடாமல் செய்கிறார்களா என்றும் சர்ச்சைகள் கிளம்புகிறது. இன்னிலையில் கங்கனா ரனாவத் ஏற்கனவே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற படத்தில் நடித்து பிரபலமானவர்.

தொடர்ந்து தோல்விப் படங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் கங்கனா ரனாவத், அடுத்து தன்னை யார் இயக்குவார்கள் என்றெல்லாம் கவலைப்படாமல் அதிரடியாக ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இவர் மீண்டும் இயக்குனராக முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே நடிகை கங்கனா ரனாவத் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான மணிகர்ணிகா திரைப்படம், சரித்திரப் படமான கங்கனாவை படம் முழுவதும் நாயகியாக அழகாக காண்பிப்பதை விட வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வீர மங்கையாக காண்பித்து வசூல் ரீதியாகவும் விமர்சன வாயிலாகவும் நல்ல வரவேற்ப்பை கிடைத்த படமானது.

அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக கங்கனா ரனாவத் இயக்கி நடிக்கும் இந்தப் படம் இந்திரா காந்தி அவர்களின் முழுமையான வரலாற்றுப் படமாக இல்லாமல், அவரது எமர்ஜென்சி காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டுமே தொகுத்து சுவாரசியம் நிறைந்த திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டிருக்கிறார். இந்த படத்திற்கு கங்கனா ரனாவத் ‘எமர்ஜென்சி’ என்று பெயரிட்டுள்ளார். மேலும் இந்த படத்திற்கான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிகிறது.

Next Story

- Advertisement -