Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
பப்ளிசிட்டிக்காக பலான வீடியோ வெளியிட்ட நடிகை.. இப்ப அதுவே வினையாகி போன பரிதாபம்
பட வாய்ப்புக்காக ஒரு சர்ச்சையான காட்சியில் மிகவும் தைரியமாக நடித்து அனைவரையும் வியக்க வைத்தவர் தான் அந்த இளம் நடிகை. அவர் எதிர்பார்த்தது போலவே அந்த காட்சியால் அவருக்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டி கிடைத்தது. ஆனால் அதுவே இப்போது அந்த நடிகைக்கு வினையாகி போனது தான் பரிதாபம்.
சமீப காலமாக இளம் நடிகைகளின் போட்டோக்கள், வீடியோக்கள் அனைத்தும் மார்பிங் செய்யப்பட்டு சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது. இதனால் வளர்ந்து வரும் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் பலரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதற்கான நடவடிக்கைகள் எடுத்தால் கூட சில விஷமிகள் இந்த வேலையை செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அப்படி ஒரு சம்பவம் தான் அந்த இளம் நடிகைக்கு நடந்திருக்கிறது. அவர் சமீபத்தில் மிகப்பெரிய இயக்குனரின் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரும் பாராட்டுகளை பெற்ற அந்த திரைப்படத்தில் நடிகை நடித்த ஒரு காட்சி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அது குறித்து நடிகை விளக்கம் அளித்த போதிலும் அந்த காட்சி இப்போது வரை ஒரு சர்ச்சையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
தற்போது அந்த வீடியோவையும் நடிகையின் சில போட்டோக்களையும் சிலர் வேறு வீடியோக்களுடன் எடிட் செய்து பலான வெப்சைட்டுகளில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் அதிக அளவு பரவி வருகிறது. அது மட்டுமல்லாமல் சில ரசிகர்கள் அந்த வீடியோவை நடிகையின் சோசியல் மீடியா பக்க கமெண்ட் பாக்ஸில் போட்டு பரப்பி வருகின்றனர்.
இதனால் அதிர்ந்து போன அந்த நடிகை என்ன செய்வதென்று தெரியாமல் நொந்து போய் இருக்கிறாராம். ஏற்கனவே நடிகை எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை. இந்நிலையில் இது போன்ற வீடியோவும் சுற்றி வருவது அவரை கடும் அப்செட் செய்துள்ளது. விரைவில் அவர் இது குறித்து புகார் கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம்.
