‘ஜில் ஜங் ஜக்’ படத்திற்கு பிறகு சத்தமே இல்லாமல் சித்தார்த் தயாரித்து நடித்து வந்த படம் ‘அவள்’.

Aval
Aval

திகில் படமான இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுமன், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை மிலிண்ட் ராவ் இயக்கியுள்ளார்.

திகில் காட்சிகள் நிறைந்த அவள் மிரட்டோ மிரட்டு என்று மிரட்டினாலும், அதன் பிறகு திரையிடப்பட்ட பாடல் காட்சி வேறு விதத்தில் மிரட்டி விட்டது.

அந்த பாடல் காட்சியில், ஆண்ட்ரியாவை வலைத்து வலைத்து சித்தார்த் லிப் டூ லிப் முத்தத்தை கொடுக்கிறார்.

aval

ஒன்றல்ல, இரண்டல்ல, அடிக்கடி ஆண்ட்ரியாவின் உதடை கவ்வியவாறே பாட்டு முழுவதும் நடித்திருக்கும் சித்தார்த், இந்த விஷயத்தில் கமல்ஹாசனையும் மிஞ்சிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

சித்தார்த் – ஆண்ட்ரியாவின் இந்த லிப் டூ லிப் முத்த மழை பாடல், ‘அவள்’ படத்தை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் கருவியாக அமைந்தது.

andrea

எல்லா படங்களையும் 2 நிமிடத்தில் விமர்சனம் செய்யும் ஒரு பிரபல யூடியூப் சேனலில் நடிகை ஆண்ட்ரியாவின் நேர்காணல் வெளியிடப்பட்டிருந்தது.

பேட்டி கண்டவர் ஆண்ட்ரியாவை வரவேற்கும் போது “நானும் எல்லோரையும் போலத்தான் உங்களை காதலுடனும் இச்சையுடன் பார்த்திருக்கிறேன்.

andrea

இன்று உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்கிறேன்” என கூறியுள்ளார். அது மட்டுமின்றி ஆண்ட்ரியா நடித்த பச்சைகிளி முத்துச்சரம் போன்ற சில படங்களின் கேரக்டர் பற்றியும் அவர் பேசினார்.

இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு பெண்ணிடம் இப்படியா பேசுவது, நடிகையிடம் என்ன கேள்வி கேட்கவேண்டும் என தெரியாதா என பல்வேறு எதிர்ப்பு குரல்கள் ஒலித்தவண்ணம் உள்ளது.