2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான 26 வயதே ஆன இந்த நடிகை, முன்னணி நடிகையாக மாறி அதன்பிறகு தமிழில் அடுத்த வருடம் தனுஷ் உடன் சேர்ந்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் ரசிகர்களை பொருத்தவரை சுடிதார், தாவணி, புடவை என குடும்ப குத்துவிளக்காகவே அவர்களின் மனதை கவர்ந்திருக்கிறார்.
இவர் தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் நடித்து தென்னிந்திய நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவருக்கு வந்த பெரும்பாலான படங்களில் ஹீரோவுடன் நெருக்கமாகவும், முத்தக் காட்சியுடன் நடிக்கும் வகையில் இருந்ததால் அந்தப் படங்களை நிராகரித்து வந்துள்ளார்.
ஆனால் இதுபோன்ற காட்சிகளின் நடித்தால் மட்டுமே பிரபலமாக முடியும் என்பதை தற்போது உணர்ந்து இருப்பதாக தெரிகிறது. இதனால் சமீபத்தில் பிரபல தயாரிப்பாளரின் சகோதரன் மகன் கதாநாயகனாக நடித்த படத்தில் முத்தக்காட்சி, பெட்ரூம் காட்சிகளில் நடிப்பதற்கு 50 லட்சம் சம்பளம் கூடுதலாக கொடுத்தால் போதும் நடிப்பேன் என ஒத்துக்கொண்டார் அந்த தனுஷ் பட நடிகை.
இதைத்தொடர்ந்து மேலும் ஒரு மலையாள படத்தில் முத்தக்காட்சி, அதிக கவர்ச்சியான உடையில் நடிக்கப் போவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் குடும்ப குத்து விளக்காக வந்த தனுஷ் பட நடிகை மலையாளத்தில் கில்மா படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கதாநாயகர்களுடன் முத்தக்காட்சியில் அதிக கவர்ச்சியான உடையில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். முன்பு ஒரு காலத்தில் பெட்ரூம் காட்சி மற்றும் முத்தக்காட்சியை தவிர்த்த நடிகை, தற்போது கிளாமர் படங்களில் லிப் லாக் முத்தக் காட்சிகளில் எக்ஸ்ட்ரா 50 லட்சம் கேட்டு வாங்கி நடித்துக்கொண்டிருக்கிறார்.
இவ்வளவு நாள் அரைகுறை ஆடை, முத்தக்காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை இப்பொழுது கூடுதலாக 50 லட்சம் வாங்கிக்கொண்டு மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகனுடன் நெருக்கமாக நடிக்க துவங்கியதை பார்த்து தமிழ் ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.