தும்பை விட்டு வாலை பிடித்த மனைவி.. கை மீறி போன காதல் கணவர்

Gossip: கடந்த சில வாரங்களாகவே அந்த நடிகர் வீட்டு பஞ்சாயத்து தான் எல்லா பக்கமும் ஓடிக்கொண்டிருக்கிறது. தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்த நடிகரா இப்படி என பலரும் வாயில் கை வைக்காத குறையாக புலம்பி வருகின்றனர்.

ஆரம்பத்தில் நடிகர் மனைவியை பிரிகிறேன் என்று சொன்னபோது இவர் மீது தவறு இருக்காது என பலரும் ஆதரவு கொடுத்தனர். ஏனென்றால் இதற்கு முன்பே நடிகரின் மனைவி எப்படிப்பட்டவர் என சில செய்திகள் கசிந்தது.

அதிலும் கணவரை கண்ட்ரோலில் வைக்க அவர் எடுத்த ஆயுதம் தான் அவருக்கே வினையாக போய்விட்டது. எதற்கெடுத்தாலும் சந்தேகம் ஆதிக்கம் என இருந்த மனைவியால் நடிகரும் தீராத மன அழுத்தத்திற்கு சென்றுள்ளார்.

கை மீறி போன காதல் கணவர்

அந்த சமயம் பார்த்து பாடகியும் நடிகருடன் நட்பு பாராட்டி இருக்கிறார். அதுதான் ரகசிய உறவுக்கு காரணமாக இருக்கிறது. இந்த விஷயத்தை கேள்வி பட்ட மனைவி கணவரை பாலோ செய்ய ஒரு ஆள் நியமித்திருக்கிறார்.

அதன் மூலம் சில ஆதாரங்களும் கிடைத்திருக்கிறது. இருந்தாலும் பிள்ளைகளின் வாழ்வுக்காக கணவரை அவர் பொறுத்து போய் இருக்கிறார். ஆனால் இப்போது யாரையும் கேட்காமல் நடிகர் எடுத்த முடிவு தான் மனைவியை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது என கையில் இருக்கும் ஆதாரங்களை வெளியிட முடிவு செய்து விட்டாராம். ஆனால் தும்பை விட்டுவிட்டு இப்போது வாலை பிடித்து என்ன பிரயோஜனம் என இந்த விவகாரத்தில் பலரும் சத்தம் இல்லாமல் பேசி வருகின்றனர்.

தும்பை விட்டுவிட்டு இப்போது வாலை பிடித்து என்ன பிரயோஜனம்

- Advertisement -spot_img

Trending News