கோட் படத்தில் நடிக்க இருந்த பிரபலம்.. கடைசியில் சிவகார்த்திகேயனுக்கு அடித்த பம்பர்

Sivakarthikeyan : சமீபத்தில் தியேட்டரில் வெளியான கோட் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த டயலாக் தான் பேசு பொருளாக மாறியது.

அதாவது விஜய் 69 படத்திற்கு பிறகு அரசியலுக்கு செல்ல உள்ளார். இதனால் சினிமாவை சிவகார்த்திகேயனிடம் ஒப்படைத்து விட்டு அரசியலுக்கு செல்கிறார் என்பது போல தான் காட்சி அமைக்கப்பட்டது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும் சிவகார்த்திகேயன் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஒரு பம்பர் அடித்துவிட்டார் என்ற பேச்சு போயக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் மிக குறுகிய காதலத்தில் விஜய்யின் இடத்திற்கு வர போகிறார் என்ற பேச்சு வருவதோ சாதாரண விஷயம் அல்ல.

சிவகார்த்திகேயனுக்கு முன்பு கோட் படத்தில் தேர்வு செய்யப்பட்ட நடிகர்

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக கேமியோவில் நடிக்க இருந்ததே வேறு ஒரு நடிகர் தான். அதாவது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிம்புவை நடிக்க வைக்கலாம் என்று வெங்கட் பிரபு முடிவு செய்திருந்தார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் மாநாடு படம் வெளியாகி இருந்தது.

அதோடு விஜய்யின் லியோ படத்திலும் சிம்பு ஒரு பாடல் பாடி இருந்தார். மாநாடு படத்தின் தொடர்ச்சியாக அந்த காட்சியை வைக்க வெங்கட் பிரபு முடிவு செய்திருந்த நிலையில் சிம்பு இப்போது சில படங்களில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு சரியான நேரம் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டு இருந்தது. இதன் காரணமாக சிம்புவுக்கு அந்த வாய்ப்பு கைநழுவி போன நிலையில் சிவகார்த்திகேயன் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டார். கோட் போனாலும் சிம்பு தமிழில் தக் லைஃப் படத்தில் பக்கா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்

- Advertisement -spot_img

Trending News