சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கடைசி வரை பிடி கொடுக்காமல் சாதித்த மகள்.. நிலைமை கை மீறியதால் நொந்து போன நடிகர்

Gossip: ஸ்டார் நடிகர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட மன உளைச்சலில் சிக்கி தவித்து வருகிறார். அதனால் தான் இப்போது அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் கசிந்து வருகிறது.

இரண்டு மகள்களையும் பாசத்தை கொட்டி வளர்த்த நடிகர் அவர்களின் திருமண வாழ்க்கையிலும் பிடித்ததை நடத்தி வைத்தார். அதில் இரண்டாவது மகள் குழந்தையோடு விவாகரத்து பெற்று திரும்பி வந்தது அவருக்கு பெரும் அதிர்ச்சி தான்.

இருந்தாலும் அடுத்ததாக ஒரு நல்ல மாப்பிள்ளையை மகளுக்கு திருமணம் செய்து வைத்து கரையேற்றி விட்டார். அந்த சந்தோஷம் நிலைப்பதற்க்குள் மூத்த மகள் கணவரை பிரியப் போகிறேன் என வந்து நின்றார்.

மூத்த மகளால் வருத்தத்தில் இருக்கும் நடிகர்

வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் நிலையில் இருவரையும் சமாதானம் செய்ய நடிகரும் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் மகளும் மருமகனும் பிரிந்தே தீருவோம் என பிடிவாதம் பிடித்ததில் நினைத்ததையும் சாதித்து காட்டி விட்டனர்.

எவ்வளவு முயற்சி செய்தும் நிலைமை கைமீறி போனதில் நடிகருக்கு சொல்ல முடியாத அளவுக்கு வருத்தம் இருக்கிறதாம். தற்போது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தாலும் எந்த அளவுக்கு அது சரியாக இருக்கும் என தெரியவில்லை.

பேரன்களுக்கு விவரம் தெரிந்த வயதில் இது சாத்தியமா என்ற குழப்பமும் அவருக்கு இருக்கிறதாம். ஆனால் மகளோ கடைசி வரை அப்பாவுடன் இருந்து விடுவது என முடிவு செய்திருக்கிறார். இதனால் நடிகர் தான் பெரும் கவலையில் இருக்கிறாராம்.

- Advertisement -

Trending News