Gossip: சமீபத்தில் மூன்றெழுத்து ஹீரோவின் நடிப்பில் வெளிவந்த படம் முதலுக்கு மோசம் இல்லாமல் தப்பித்து விட்டது. பல கோடி கணக்கில் செலவு செய்த தயாரிப்பாளரும் நஷ்டமில்லாமல் தன்னை காப்பாற்றிக் கொண்டார்.
படம் சில கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் பொருத்தவரை லாபம் தான். ஆனாலும் நடிகருக்கு இயக்குனரின் மேல் அதிருப்தியும் கோபமும் இருக்கிறதாம். இதற்கு முக்கிய காரணம் அவர் கொடுத்த பில்டப் தான்.
விளையாட்டு பிள்ளையாக இருக்கும் அந்த இயக்குனர் படத்தை அப்படி கொண்டு வருவேன் இப்படி கொண்டு வருவேன் என நடிகரிடம் அளந்து விட்டிருக்கிறார். அதே போல் ஹாலிவுட் லெவலில் இருக்கும் என நம்பிக்கையும் கொடுத்திருக்கிறார்.
ஹீரோவை கடுப்பாக்கிய இயக்குனர்
கடைசியில் படம் வெளிவந்த பிறகு தான் தெரிந்திருக்கிறது ஹாலிவுட் போல் இல்லை ஹாலிவுட் படத்தின் காப்பி தான் என்று. இதனால் கடுப்பான ஹீரோ இப்போது இயக்குனர் போன் செய்தால் கூட எடுக்காமல் நாசுக்காக தவிர்த்து விடுகிறாராம்.
அதேபோல் படத்தின் வெற்றியை பெரிய அளவில் கொண்டாடலாம் என தயாரிப்பு தரப்பை யோசித்து இருக்கிறது. ஆனால் நடிகரோ எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்லை அதெல்லாம் வேண்டாம் என முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்.
இப்படி நடிகர் செம அப்சட்டில் இருப்பதற்கு காரணமே இயக்குனர் தான் என கோடம்பாக்க வட்டாரத்தில் ஒரு பேச்சு கிளம்பி இருக்கிறது. மேலும் இயக்குனர் போட்டி நடிக்கரை வைத்து இந்த படத்தை பிரமோஷன் செய்தது கூட மாஸ் ஹீரோவுக்கு பிடிக்கவில்லை என கிசுகிசுத்து வருகின்றனர்.