உங்க போதைக்கு நான் ஊறுகாயா.? சீனியர் நடிகைக்கு நோஸ்கட் கொடுத்த நடிகர்

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் அந்த ரியாலிட்டி ஷோ முடிந்த பிறகும் கூட பஞ்சாயத்து தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஏற்கனவே டைட்டில் வின்னர் அக்கப்போர் சோசியல் மீடியாவில் ஏழரையை கூட்டிக் கொண்டிருக்கிறது.

இதில் சீனியர் நடிகையும் தன் பங்குக்கு அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியின் பல ரகசியங்களை போட்டு உடைத்துக் கொண்டிருக்கும் அவர் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் இருந்து பாதியிலேயே வெளியேறி இருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

சம்பந்தப்பட்ட சேனல் நடத்திய ஒரு ஷோவில் கலந்து கொள்ள வந்த நடிகை ஒரு கண்டிஷன் போட்டு இருக்கிறார். நிகழ்ச்சியில் அவருக்கு எதிரணியில் விளையாட வந்த நடிகர் தன்னுடைய டீமுக்கு வர வேண்டும் என்று நடிகை கூறி இருக்கிறார்.

Also read: வில்லி நடிகையை எப்படியோ கரெக்ட் செஞ்ச முரட்டு சிங்கிள்.. ரீல் ஜோடி ரியல் ஜோடி ஆகுதே!

ஏற்கனவே ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் இந்த சீனியர் நடிகைக்கும் அந்த நடிகருக்கும் வாய்க்கா தகராறு இருந்தது. இதனால் நடிகர் என்னால் அந்த அம்மா கூட எல்லாம் சேர்ந்து விளையாட முடியாது. உங்க போதைக்கு நான் ஊறுகாவா என ஸ்ட்ரிக்ட் ஆக கூறிவிட்டாராம்.

இதனால் நிகழ்ச்சி தரப்பினர் சீனியர் நடிகையை சமாதானம் செய்து சூட்டிங்கிற்கு அழைத்திருக்கின்றனர். ஆனால் அவரோ என் பேச்சுக்கு மதிப்பு இல்லாத இடத்துல என்னால இருக்க முடியாது என கோபமாக பேசிவிட்டு வெளியேறிவிட்டாராம்.

எவ்வளவு கெஞ்சியும் முடியாது என்று மறுத்த அவர் காரில் ஏறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு சேனல் தரப்பு வேறு ஒருவரை வைத்து அந்த நிகழ்ச்சியை முடித்து இருக்கின்றனர். ஏற்கனவே சீனியர் நடிகை மீது மக்களுக்கு சிறு அதிருப்தி இருந்தது. இதில் இந்த விஷயமும் ரிலீக்கானதில் மொத்த பெயரும் டேமேஜ் ஆகி இருக்கிறது.

Also read: முரட்டு குடியால் கேரியரை தொலைத்த நடிகை.. விட்ட இடத்தை பிடிப்பதற்காக எடுத்த சபதம்

- Advertisement -spot_img

Trending News