புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பழைய காதலை மறக்காத நடிகர்.. திருமணமான பிறகும் காதலிக்கு கொடுக்கும் டார்ச்சர்

Gossip: ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நடிகர் இப்போது மொத்தமாக மாறிவிட்டார். தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கும் இவர் முன்னாள் காதலியை மறக்க முடியாமல் தவித்து வருவதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அந்த நடிகையுடன் காதல் லிவிங் ரிலேஷன்ஷிப் என நெருக்கம் காட்டி வந்த நடிகர் திடீரென அவரை பிரிந்தார். இதற்கு நடிகை தான் காரணம் என அப்போதே பேசப்பட்டது.

அதன் பிறகு நடிகை இன்டஸ்ட்ரியில் கொஞ்சம் தடுமாறினாலும் இப்போது தனக்கான இடத்தை பிடித்து விட்டார். அதேபோல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகியும் விட்டார்.

ஆனால் நடிகர் இன்னும் பழைய காதலை மறக்காமல் அவரை தொந்தரவு செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் இப்போதெல்லாம் அவர் நடிகைக்கு அதிக தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டாராம்.

நடிகையை டார்ச்சர் செய்யும் முன்னாள் காதலர்

அர்த்த ராத்திரியில் படுமோசமான மெசேஜ் அனுப்பி மீண்டும் தன்னுடன் வந்து விடுமாறு கேட்டுக் கொண்டே இருக்கிறாராம். ஆரம்பத்தில் நடிகை இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் நடிகர் சமீப காலமாக காதலிக்கும் போது எடுத்த அந்தரங்க போட்டோக்களை எல்லாம் நடிகைக்கு அனுப்பி வருகிறாராம். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

அதேபோல் நடிகை பற்றி எல்லாம் தெரிந்து கல்யாணம் செய்து கொண்ட கணவர் கூட அப்செட்டில் இருக்கிறாராம். இந்த பிரச்சனையை இதற்கு மேல் வளர விடக்கூடாது என இருவரும் சேர்ந்து ஒரு முடிவு கட்டுவதற்காக ஆலோசித்து வருகிறார்கள்.

- Advertisement -

Trending News