நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் பெயர் வாங்கிய நடிகர்.. பொறாமையால் மொத்த படத்தையும் குழப்பி விட்ட வடிவேலு

வடிவேலு பல வருட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் இப்போது ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. அதிலும் முக்கியமாக படத்தில் வடிவேலுவின் காமெடி சுத்தமாக எடுபடவில்லை.

ஒட்டுமொத்த படத்திலும் ரசிகர்களுக்கு பிடித்த ஒரே விஷயம் ஆனந்தராஜின் வருகைதான். அவர் செய்யும் காமெடி மட்டுமே அனைவருக்கும் பிடித்திருக்கிறது. ஆனால் படத்தில் அவர் வரும் நேரம் மிகவும் குறைவு. ஆனாலும் அவர் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டார். அதனால் தான் ரசிகர்கள் இப்போது அவர் படம் முழுக்க வந்திருந்தால் படம் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also read: ஓடி ஓடி விளம்பரம் செய்தும் மண்ணை கவ்விய வடிவேலு.. வசூலில் விழுந்த அடியால் பின்வாங்கும் தயாரிப்பாளர்கள்

உண்மையில் ஆனந்தராஜின் கதாபாத்திரம் படம் முழுக்க வருவது போன்று தான் இருந்திருக்கிறது. ஆனால் அதைப் பார்த்த வடிவேலு அனைத்து காட்சிகளையும் படத்திலிருந்து நீக்க சொல்லிவிட்டாராம். மேலும் என் படத்தில் என்னை தவிர வேறு யாரும் ஸ்கோர் செய்துவிட கூடாது என்ற எண்ணத்தில் அவர் இவ்வாறு செய்து இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் படத்தில் ஆனந்தராஜ் வரும் அறிமுக காட்சியே வேற லெவலில் எடுக்கப்பட்டிருந்ததாம். ஆனால் அதை பார்த்த வடிவேலு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அந்த காட்சியை கட் செய்ய சொல்லியிருக்கிறார். மேலும் அந்த காட்சியை அவருக்கு வைக்க வேண்டாம் என்னுடைய அறிமுகக் காட்சிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

Also read: அஜித்தை எகத்தாளமாக பேசிய வடிவேலு.. ஒதுங்கிப் போனாலும் தேடி போய் வம்பிழுத்த வைகைப்புயல்

அந்த அளவுக்கு ஆனந்த்ராஜ் படத்தில் ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார். இவ்வாறு படம் முழுக்க அவருடைய தலையீடு அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கிறது. அவர் மட்டுமே படம் முழுக்க நிறைந்து இருக்க வேண்டும் என்று நினைத்ததினால் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் இவ்வளவு சொதப்பி இருக்கிறது. இல்லாவிட்டால் படம் நிச்சயம் வேற லெவலில் வெற்றி அடைந்திருக்கும்.

அது மட்டுமல்லாமல் படத்தில் விஜய் டிவி பிரபலங்களான சிவாங்கி, முனீஸ் காந்த், ஷிவானி உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தும் அவர்கள் படத்தில் இருந்தது போன்றே தெரியவில்லை. ஒரு சில காட்சிகளை தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் அவர்கள் அனைவரும் ஒரு செட் பிராப்பர்ட்டி போலவே இருந்தார்கள். அதனாலேயே இந்த திரைப்படம் இப்போது தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முழுக்க முழுக்க வடிவேலு மட்டுமே காரணம். அதன் காரணமாக இப்போது அவரை வைத்து படம் எடுக்க பலரும் தயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: ஓவர் திமிரில் ஆடிய வடிவேலு.. 85 படங்களில் நடித்தும் கிடைக்காத அங்கீகாரம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்