முதல் முறையாக 3 வேடமிட்டு நடித்த பிரபல நடிகர்.. எந்த படம் தெரியுமா ?

தற்போது ஹீரோ, வில்லன் என ஒரே நடிகர் இரட்டை வேடத்தில் நடிக்கும் படங்கள் சமீபகாலமாக நிறைய வருகிறது. ஆனால் இந்த கலாச்சாரம் 60களிலேயே வந்துவிட்டது. அப்போது பழைய நடிகர்கள் இரண்டு அல்லது மூன்று வேடங்களில் நடித்துள்ளனர். உலகநாயகன் கமலஹாசன் சினிமாவுக்காக பல அர்ப்பணிப்புகள் செய்யக்கூடியவர்.

அவ்வாறு, கமலஹாசன் தன்னுடைய தசாவதாரம் பத்து வேடங்களில் நடித்து மிரட்டி இருந்தார். ஆனால் கமலுக்கு முன்னரே சிவாஜி கணேசன் நவராத்திரி என்ற படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். இது பலரையும் பிரமிக்கச் செய்தது. மேலும் தமிழ் சினிமாவில் முதல் முதலாக மூன்று வேடமிட்ட நடித்த நடிகர் என்றாலும் அதுவும் சிவாஜிதான்.

தற்போது பல நடிகர்கள் பல வேடங்களில் நடிப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டது சிவாஜி கணேசன் உடைய படம் தான். 1969 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெயலலிதா, எம் என் நம்பியார், நாகேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான தெய்வமகன் படத்தில் சிவாஜி மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் சிவாஜி சங்கர், கண்ணன், விஜய் என மூன்று வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். இதில் சிவாஜியுடன் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்படத்திற்கு கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார்.

இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அனைவரது பாராட்டையும் பெற்றது. தெய்வமகன் படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. மேலும், இப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருதை இப்படத்திற்காக சிவாஜி பெற்றார்.

தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் பல வேடங்களில் நடிப்பதே பிரம்மிப்பாக பார்க்கப்படுகின்ற நிலையில் 60களில் பெரிய அளவில் எந்த தொழில்நுட்பமும் இல்லாத நிலையில் சிவாஜி இவ்வாறு பல வேடங்களில் நடிப்பதற்காக எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார் என்பது தெரிகிறது. மேலும், சிவாஜிக்கு இணையான நடிகரை இன்றுவரை தமிழ் சினிமா பார்த்ததில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்