Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
இரண்டாவது திருமணத்தால் படாதபாடு படும் நடிகர்.. எல்லாம் முதல் மனைவி விட்ட சாபம்
சினிமா துறையில் இருந்து நடிக்க வந்த அந்த நடிகர் ஆரம்பத்திலேயே நமக்கு எது வருமோ அதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தொடர்ந்த அந்த படங்கள் வரவேற்ப்பை பெற அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
நடுவில் தொடர் தோல்விக்கு பிறகு த்ரில்லர் படத்தின் மூலம் மீண்டும் தனது முத்திரையை பதித்தார். இந்நிலையில் கல்லூரி படித்த போது காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. சந்தோஷமாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் புயல் காற்று வீசியது.
அதாவது அந்த நடிகர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் இணையத்தில் வெளியானது. அதேபோல் தனது தயாரிப்பாளர் கனவை நிறைவேற்றிய பெண்ணை கடந்த ஆண்டு அந்த நடிகர் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணம் ஆனதில் இருந்தே படாதபாடுபட்டு வருகிறார் அந்த நடிகர். ஏனென்றால் சில பிரச்சனை காரணமாக கோர்ட், கேஸ் என்று அலைந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை.
போதாக்குறைக்கு சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்ட புகைப்படம் வேற லெவலில் சர்ச்சையை உண்டாக்கியது. முதல் மனைவியின் சாபத்தால் தான் அந்த நடிகர் நிம்மதி இல்லாமல் இவ்வாறு அவதிப்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
