15 மில்லியன் டாலரை விடாப்பிடியாக மனைவியிடம் வாங்கிய நடிகர்.. 4 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட சம்பவம்!

கடந்த 2003ஆம் ஆண்டு முதல் ஐந்து சீசன்கள் ஆக வெளியான பிரபல ஹாலிவுட் படமான ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ திரைப்படத்தில் கேப்டன் ஜேக்ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஜானி டெப்.

இவர் 1983 ஆம் ஆண்டு லோரி ஆனி ஆனிசன் என்பவரை திருமணம் செய்து, அதன் பிறகு இரண்டே ஆண்டில் விவாகரத்து பெற்றுவிட்டார். அதன் பிறகு ஜானி டெப் மீண்டும் நடிகை ஆம்பர் ஹெர்ட் என்பவரை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு மீண்டும் இரண்டே வருடத்தில் விவாகரத்து செய்தார்.

பிறகு 58 வயதாகும் ஜானி டெப் மற்றும் இரண்டாவது மனைவி நடிகை ஆம்பர் ஹெர்ட் இருவரும் ஒருவர் மீது ஒருவர் படு கேவலமான குற்றச்சாட்டுகளுடன் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனால் ஜானி டெப் உடைய இரண்டாவது மனைவி 2018 ஆம் ஆண்டு மானநஷ்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

4 ஆண்டுகளாக இழுத்தடித்து கொண்டே சென்ற இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு அவருக்கு சாதகமாகவும், நடிகை ஆம்பர் ஹெர்ட் பக்கம்தான் குற்றம் இருப்பதாக அவருக்கு 15 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து, ஜானி டெப் ஆம்பர் ஹெர்டுக்கு 2 மில்லியன் டாலர் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கின் மூலம் 15 டாலர் அபராதமாக மனைவி இடம்பெற்று, அதிலிருந்து 2 டாலர் ஆம்பர் ஹெர்ட்க்கு கொடுத்தால், மொத்தம் 13 டாலர் ஜானி டெப்புக்கு இந்த வழக்கிலிருந்து கிடைத்திருக்கிறது. இதையடுத்து தன்னுடைய வாழ்க்கை திரும்பி கிடைத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் ஜானி டெப் பேட்டி அளித்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நீண்ட நாட்களாக இந்த வழக்கில் சிக்கித் தவித்த கொண்டிருந்த இவர், சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்திலிருந்து இதன் காரணமாகவே நீக்கப்பட்டார். இனிமேலாவது ஜானி டெப் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று பெரும் நம்பிக்கை இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்