அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 16ஆம் திகதி சுகேஷை பொலிசார் கைது செய்தனர். மேலும் கடந்த 25ஆம் திகதி தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிகம் படித்தவை:  தனுஷின் வி ஐ பி மொபெட்டை ஓட்டும் 'மிர்ச்சி சிவா', 'சின்ன தல ரெய்னா' ! ரீல் vs ரியல் !

தற்போது இந்த வழக்கில் மேலும் ஒரு முக்கிய தகவலை டெல்லி பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அதாவது, ஆர்.கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்ட பின்னர் மறு தேர்தல் நடத்துவது குறித்து தினகரனும், சுகேஷ் சந்திரசேகரும் பேசிய ஓடியோ பதிவு தங்களிடம் உள்ளதாக நீதிமன்றத்தில் டெல்லி பொலிசார் தெரிவித்து உள்ளனர்.

அதிகம் படித்தவை:  சிம்புவுக்காக இவர் எழுதும் முதல் பாடல்? யார் தெரியுதா?

மேலும், தினகரனின் ஜோதிடர், அவருக்கு ராசியான எண் 5 என கூறியதாகவும், அதன்படி மறுதேர்தல் திகதி 5 என்ற எண்ணில் வருமாறு ஏற்பாடு செய்யும் படி சுகேஷிடம் தினகரன் பேசிய ஓடியோ தங்களிடம் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்