விசிக கட்சி தலைவரின் திடீர் முடிவு.. குழப்பத்தின் உச்சத்தில் மற்ற கட்சிகள்!

வருகின்ற மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆனாலும் இதுவரை இருபக்கங்களிலும் கூட்டணி சரிவர உறுதியாகாமல் உள்ளது.

ஏனென்றால், ஒருபுறம் திமுக புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை நீக்கிவிட்டு, தனித்துப் போட்டியிட முடிவு செய்ததோடு, ஜெகத்ரட்சகனை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி மிகவும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசியல் களத்தில் மற்றொரு வியக்கத்தக்க சம்பவம் நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால், இத்தனை நாட்களாக தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று கூறிக் கொண்டிருந்த விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் தற்போது திமுகவின் சின்னத்தில் போட்டியிட தயார் என்று ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இதனால் அந்தக் கட்சியின் தனித்தன்மை குறைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், கூட்டணி கட்சிகளுக்கு அமைந்த இடங்களை கொடுக்கவேண்டும் என்றும், அவர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும், திமுகவின் மேலிடம் வற்புறுத்தி வருகிறதாம். இதன் காரணமாகத்தான் திருமாவளவன்  இந்தப் பேட்டி அளித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்படும் பிற கட்சி எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் சுதந்திரமாக செயல்பட முடியாது என்றும், திமுக எடுக்கும் நிலைப்பாட்டை தான் பிற கட்சிகளும் எடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

thirumavalavan

இது போன்ற முடிவுகளை சிறிய கட்சிகள் எடுப்பது, பெரிய கட்சிகளிடம் தங்களை அடகு வைப்பதற்கு இணை என்று அரசியல் நோக்கர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர் எனவே இவ்வாறு பல திருப்பங்கள் அரசியல் கட்சிகளில் நிகழ்வது அரசியல் களத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்