செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த 6 புது போட்டியாளர்கள்.. ஆட்டத்தை மாற்றுவார்களா வந்த வேகத்தில் ஓடுவார்களா.?

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பித்த நான்காவது வாரத்திலேயே போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. முந்தைய சீசன்களில் ஏதாவது ஒரு சர்ச்சை அதுவும் இல்லை என்றால் லவ் டிராக்காவது இருக்கும்.

ஆனால் இந்த சீசனில் அதற்கு வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. பெண்கள் அதற்கு பிள்ளையார் சுழி போட்டாலும் ஆண்கள் ஒரு டீமாக இருந்து அதை அழித்து விடுகின்றனர். ஆனால் விரைவில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஏனென்றால் ஆறு புது போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்துள்ளனர். அதன்படி மாடல் மற்றும் பிக்பாஸ் ரிவ்யூவரான ரியா, நடிகர் ராணவ், வர்ஷினி, தமிழ் பேச்சாளர் மஞ்சரி, விஜய் டிவி சீரியல் பிரபலம் ரயான், சிவாஜி வீட்டு வாரிசு சிவகுமார் ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

இவர்களை பார்த்த பிறகு சீனியரான பழைய போட்டியாளர்களின் முகத்தில் ஒரு கலவரம் தெரிந்தது. அதை அதிகப்படுத்தும் விதமாக பிக்பாஸ் அவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்து நல்லா அடிச்சுக்கோங்க என கோர்த்துவிட்டார்.

புது வரவுகளால் ஆட்டம் சூடு பிடிக்குமா.?

அதில் ஒவ்வொருவரும் வெளியில் பார்த்ததை நாசுக்காக போட்டு உடைத்தனர். இதில் சாச்சனா அசைவ உணவை வெளுத்து கட்டியதையும் அதை கேமரா ஜூம் செய்து காட்டியதையும் வந்த வேகத்திலேயே சொல்லிவிட்டனர்.

இதனால் பாப்பா சக பெண்களிடம் இது பற்றி அனத்தி கொண்டிருந்தார். இப்படியாக புது வரவுகளால் சீனியர் போட்டியாளர்களின் மனநிலை கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்கிறது. ஏற்கனவே அவர்களிடம் சிறு சோர்வு தெரிகிறது.

ஆரம்பத்தில் இருந்த புத்துணர்ச்சி குறைந்த நிலையில் புது போட்டியாளர்களால் அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்கள் என தெரிகிறது. அது மட்டும் இன்றி ஆண்கள் மத்தியில் சில அதிருப்தி வெளிப்படையாகவே தெரிகிறது.

இதற்கு மத்தியில் புது போட்டியாளர்கள் தங்களுடைய யுக்தியால் விளையாட்டின் போக்கை மாற்றுவார்களா அல்லது வந்த வேகத்திலேயே திரும்பி போவார்களா என்பது விரைவில் தெரிந்து விடும். இதில் சிவகுமார் ஒரு கடுமையான போட்டியாளராக வருவார் என்ற அறிகுறி இப்போதே தெரிகிறது.

- Advertisement -

Trending News