வெளிநாட்டு பொருட்களை வாங்கினால் இனி சோலி முடிந்தது.. அதிர்வலையை ஏற்படுத்திய 20% TCS, தல சுத்துது

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறது எதுக்கு ஜாலியா செலவு பண்ண தானே. ஆனா அதுலயும் பிரச்சனை வந்தா என்ன பண்றது. அப்படி ஒரு சூழ்நிலையை தான் இப்போது மக்கள் பலரும் எதிர்கொண்டு வருகிறார்கள். அதாவது நினைத்த பொருட்களை வாங்கவும், ஆடம்பரமாக செலவு செய்யவும் நமக்கு வரப் பிரசாதமாக அமைந்த ஒரு விஷயம் தான் கிரெடிட் கார்டு.

இது பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்தாலும் வருவதை அப்புறம் பார்த்துக் கொள்வோம் என்ற மனநிலையில் பலரும் இதை வாங்கி செலவு செய்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது புதிய விதிமுறை ஒன்று அமலுக்கு வர இருக்கிறது. இதுதான் இப்போது பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: போன வருடம் இதே நேரம் மனைவியுடன் விவாகரத்து.. இப்போது 7 நிமிடம் விடாமல் கைத்தட்டி பாராட்டி வாங்கிய தேசிய விருது

என்னவென்றால் வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் அதற்கு விதிக்கப்படும் வரி இப்போது உயர்ந்திருக்கிறது. அந்த வகையில் 50% ஆக இருந்த இந்த வரி தற்போது 20% ஆக உயர்ந்துள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் 2.5 லட்சம் வெளிநாடுகளில் செலவு செய்கிறீர்கள் எனில் அதற்கு 50 ஆயிரம் வரி செலுத்த வேண்டும்.

அப்படி பார்த்தால் மொத்தம் மூன்று லட்சம் நீங்கள் செலுத்தும் படி இருக்கும். இப்படி ஒரு விதிமுறைதான் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த பரிவர்த்தனை விதிமுறைகள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. மேலும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு இது பெரும் தடையாக மாறி இருக்கிறது.

Also read: அநியாயமாக உயிரிழந்த ராணுவ வீரன் பிரபு.. உண்மையை வெளிக்கொண்டு வந்த தேசிய ஊடகங்கள்

அப்படி பார்த்தால் இனி வரும் காலங்களில் இந்த வெளிநாட்டு பயணம் பலருக்கும் விலை உயர்ந்ததாக தான் இருக்கும். அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் கூட மிடில் கிளாஸ் மக்களுக்கு அது கொஞ்சம் கஷ்டம் தான். இதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பலரும் இனி வெளிநாட்டு பொருட்களை வாங்கினால் நம் சோலி அவ்வளவுதான் என இந்த விவகாரத்தை நகைச்சுவையாகவும் பேசி வருகின்றனர். இருப்பினும் இந்த விதிமுறை அவ்வளவு வரவேற்கப்படவில்லை என்பதே உண்மை. ஆனாலும் இந்த வரி சுமையை மக்கள் ஒரு சவாலாக எதிர்கொண்டு ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றனர்.

Also read: கூகுள் சாம்ராஜ்யத்தை ஒழிக்க வந்த ChatGPT-யின் ஆட்டம் முடிந்தது.. தரமான போட்டியாளரை களமிறக்கிய சுந்தர் பிச்சை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்