லாஸ்லியா போல காதல் கிசுகிசுக்காக தேர்வு செய்யப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்.. 19 வயது நடிகையை தூக்கிய விஜய் டிவி

Bigg Boss Season 7: விஜய் டிவியில் இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்த முறை யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்களை கொண்டு வர இருக்கிறார்கள். இதில் முதலாவதாக இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக இருக்கப் போகிறது. அதேபோல் போட்டியாளர்களையும் தரமாக இறக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

அதிலும் ரேகா நாயர், பப்லு ப்ரீத்திவிராஜ் போன்ற சர்ச்சையான போட்டியாளர்கள் பங்கு பெற இருக்கின்றனர். சமீபத்தில் தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தமிழ் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. இந்த முறை யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற ஆர்வம் இருக்கிறது.

Also Read : விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் சாதனை படைத்த நெல்சன்.. பிக் பாஸால் கூட உடைக்க முடியாத டிஆர்பி தெரியுமா?

எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது காதல் ட்ராக் ஒன்று போகும். ஆரவ்-ஓவியா, கவின்-லாஸ்லியா, அமீர்-பாவனி என பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் கிசுகிசுக்களில் பல ஜோடிகள் சிக்கி இருக்கின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியிலும் கண்டிப்பாக காதல் ட்ராக் இடம்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் லாஸ்லியா கவின் உடன் காதல் சர்ச்சையில் சிக்கிய நிலையில் அவரது பெயரை கெடுத்துக் கொண்டார். அதன் பிறகு கதாநாயகியாக படங்களில் நடித்த நிலையில் அதுவும் சரியாக போகவில்லை. கவின் சினிமாவில் ஜெயித்தது மட்டுமின்றி திருமண வாழ்க்கையிலும் காதலித்து மோனிகாவை கரம் பிடித்து விட்டார்.

Also Read : கல்யாணம் முடிந்த கையுடன் முடிவுக்கு வரும் சீரியல்.. விஜய் டிவியின் மொத்த டிஆர்பிக்கும் சங்கு ஊதிட்டாங்க!

இப்போது லாஸ்லியாவை போலவே காதல் கிசுகிசுக்காக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரவீனா தாஹா போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார். ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் இரண்டாம் பாகம் தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் இவர் போடும் கவர்ச்சி போட்டோ ஷீட் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 19 வயது ஆன ரவீனா தாஹா பிக் பாஸ்க்கு வருவது ரசிகர்கள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கண்டிப்பாக ரவீனா காதல் சர்ச்சையில் சிக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் விஜய் டிவியின் டிஆர்பி எகிற போகிறது.

Also Read : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் ஏற்பட்ட சிக்கல்.. விஜய் டிவியின் பாலிடிக்ஸ், ஒத்து ஊதும் இரண்டு பிரபலங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்