Connect with us
Cinemapettai

Cinemapettai

meesai-thavasi-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காப்பாற்ற முடியாமல் போன ‘கருப்பன் குறும்புக்கார’ தவசி.. காரணம் கேட்டு அதிர்ச்சியான திரைத்துறையினர்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி வேடங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகர் தவசி.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் தவசியின் சிகிச்சை செலவு மொத்தத்தையும் திமுக எம்எல்ஏ சரவணன் ஏற்றுக்கொண்டார். அவரது சிகிச்சைக்காக போதிய பணம் இல்லாதது குறித்த தகவல்கள் கிடைத்ததும் ரஜினிகாந்த்,  விஜய் சேதுபதி, சிம்பு, சிவகார்த்திகேயன், சூரி, ரோபோ சங்கர் உட்பட பல நடிகர்கள் உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல், நடிகர் நடிகர் தவசி மீண்டும் குணமாகி வந்து சிங்கம் போல வசனங்களை பேசி மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று திரையுலகினர் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி, சிகிச்சை பலனின்றி இவ்வுலகை விட்டு நீங்கினார் என்ற தகவல்கள் வெளிவந்து  திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஏனெனில் கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரரான தவசிக்கு உணவுக் குழலில் ஏற்பட்ட  புற்றுநோய் நான்காம் நிலையை தொட்டதால் அவரால் உணவு கூட அருந்த முடியாத நிலை ஏற்பட்டதாம்.

இதனால் அந்த நோய்க்கு எவ்வளவு சிகிச்சை கொடுக்கப்பட்டாலும் அது பயனளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த காரணத்தால் தான் இவ்வளவு உதவிகள் கிடைத்தும் கூட அவரால் நோயிலிருந்து மீண்டு வர முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் பலர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை இணையத்தின் வாயிலாக அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top