முந்தானை முடிச்சு தவக்களை நியாபகம் இருக்க.? 496 படங்கள் நடித்தும் ஒரே படத்தினால் நடுதெருவுக்கு வந்த சோகம்

வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவால் மிகப்பெரிய வீழ்ச்சி சந்தித்தவர் தான் அந்த மூன்று அடி சின்ன நடிகர். ஆனால் எம்ஜிஆரிடம் பாராட்டைப் பெற்றுள்ளார் ஆனால் வாழ்க்கையில் தோத்து உள்ளார் அது என்ன என்பதை பார்ப்போம்.

பொய்சாட்சி என்ற படத்தில் அவரது தந்தை நடித்துக் கொண்டிருந்தார் அப்போது சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற தவக்களை என்ற சிட்டிபாபு வை குள்ளமணி என்ற நடிகர் பார்த்துள்ளார்.

பின்பு அவர்களை அழைத்துச் சென்று பாக்யராஜும் அறிமுகப்படுத்தியுள்ளார். பாக்கியராஜ் இவரது தோற்றம் பாடி லாங்குவேஜ் பார்த்து அவருக்கு முந்தானை முடிச்சு படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

thavakalai
thavakalai

அந்த படத்தில் தவக்களை எனும் கதாபாத்திரத்தில் கலக்கு கலக்கு என கலக்கியிருப்பார். அதன் பிறகுதான் எம்ஜிஆர் அவர்களை நேரடியாக பார்த்து அவரது நடிப்பிற்கு பாராட்டியுள்ளார்.

எம்ஜிஆர் மற்றும் பாக்யராஜ் அவரது கல்யாணத்தில் அவரை தூக்கி தன் மடியில் அமர வைத்துத்தாராம். அந்த அளவிற்கு சினிமாவில் அனைத்து நடிகர்களிடமும் நல்ல நட்புறவை வைத்திருந்தார்.

காக்கி சட்டை, ஆண் பாவம் மற்றும் பாட்டு வாத்தியார் போன்ற 496 படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு 500 படங்களாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது கடைசி வரை நிறைவேறவில்லை.

இவர் வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவு என்னவென்றால் விஜயா புரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு கம்பெனியை நண்பர்களுடன் ஆரம்பித்து மண்ணில் இந்த காதல் என்ற படத்தை தயாரித்து மிகப்பெரிய தோல்வி அடைந்தார்.

அதனால் தனது சொந்த வீட்டை விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார் இவர் கடைசியாக நடித்த படம் தான் அற்புத தீவு.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்