Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-fans

Tamil Cinema News | சினிமா செய்திகள்

60 கோடி சம்பளம் வாங்கும் அஜித்தின் முதல் சம்பளம் இவ்வளவுதானா? அதிர்ச்சியில் தல ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். தமிழகத்தில் தல அஜித்திற்கு என்று தனி ஃபேன்ஸ் பட்டாளமே உண்டு

மேலும் தற்போது வெளியாகும் இவருடைய படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபீசை குவிப்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் நடிகர் அஜித் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் பற்றிய விபரம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது தற்போது நடித்து வரும் படங்களில் எல்லாம் அஜித்குமார் சுமார் 60 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறார் என்று தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இவ்வாறிருக்க தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் தல தனது முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் ரூபாய் 2500 என தெரியவந்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

தற்போது இவர்  வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

மேலும் ‘வலிமை’ திரைப்படத்தை இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான போனி கபூர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்- ன் இந்த அபரிவிதமான வளர்ச்சியை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top