Trapping Woolly MammothAt the end of the last Ice Age, when the climate was cooler and big game lumbered across grasslands and forests of what is now Eastern Europe, Cro-Magnon paleo-hunters trapped mammoths and other prey in marshy areas and excavated pits covered in camouflage or drove them off cliffs. The big-game bonaza didn't last. Over-hunting and climate change led to the extinction of the megafauna in the Late Pleistocene 10,000 to 11,000 years agoArtwork: Zdeněk Burian

பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எரிக்கல் தாக்கியதால் டைனோசர்கள் எப்படி உயிரிழந்தன எனவும் இதற்கு பின்னர் மனிதர்கள் எப்படி தோன்றினார்கள் என்பது குறித்தும் விரிவான ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல செய்தி நிறுவனமான பிபிசி தொலைக்காட்சி ‘The Day The Dinosaurs Died’ என்ற ஆவணப்படத்தை ஒளிப்பரப்புகிறது.

இந்த ஆவணப்படத்தில் பூமியை எரிக்கல் தாக்கியது எப்படி? டைனோசர்கள் எப்படி உயிரிழந்தன? இதற்கு பின்னர் மனிதர்கள் எப்படி தோன்றினார்கள்? என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

பூமியில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்னர் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளாக பூமியை ஆட்சி செய்தது டைனோசர்கள் தான்.

ஆனால், இயற்கையின் முன்னால் எதுவும் நிரந்திரம் இல்லை என்பது போல் சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியை நோக்கி 14 கி.மீ நீளமுள்ள எரிக்கல் பாய்ந்து வந்துள்ளது.

மணிக்கு 40,000 கி.மீ வேகத்தில் வந்த எரிக்கல் தற்போது மெக்ஸிகோ நாட்டின் நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான அணுகுண்டுகள் ஒன்றாக சேர்ந்து விழுந்தது போல் தாக்கியுள்ளது.

தற்போது மெக்ஸிகோ கடற்கரையில் இருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள Yucatan என்ற தீபகற்ப பகுதியில் தான் இந்த எரிக்கல் விழுந்துள்ளது.

எரிக்கல் விழுந்து தாக்கியதில் சுமார் 178 கி.மீ தூரத்திற்கு பெரும் பள்ளமும், 32 கி.மீ தூரத்திற்கு ஆழமும் ஏற்பட்டது.

இவ்வளவு பெரிய தாக்கத்தை எதிர்க்கொள்ள முடியாமல் லட்சக்கணக்கான உயிரினங்கள் சில நிமிடங்களில் உயிரிழந்தன.

ஆனால், டைனோசர்கள் மற்றும் பிற உயிரினங்கள் இந்த வெடிப்பினால் மட்டும் உயிரிழக்கவில்லை.

விண்வெளியில் இருந்து வந்த அந்த எரிக்கல்லானது கந்தக உப்பினால் ஆனது. எரிக்கல் பூமியில் விழுந்ததும் அதில் இருந்த சுமார் 100 டன் எடையுள்ள சல்பேட் உப்புகள் வான்வெளியில் படர்ந்து சூரிய ஒளியை முற்றிலுமாக மறைத்துள்ளது.

ஒரு மாதம், ஒரு ஆண்டாக மட்டுமில்லை. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பூமியில் சூரிய ஒளி படரவில்லை. இதனால், உலக நிலப்பரப்பில் சுமார் 75 சதவிகிதம் கொடூரமான பனிப்படத்திற்கு உள்ளானது.

காணும் இடம் எங்கிலும் உடலை உருக வைக்கும் குளிர்ச்சியான காலநிலையாக இருந்துள்ளது. இதனால், ஒவ்வொரு உயிரினங்களும் காலநிலையை எதிர்க்கொள்ள முடியாமல் உயிரை விட்டன.

இதன் தொடர்ச்சியாக. உணவு கிடைக்காமல் பல மாதங்களாக பட்டியாக திரிந்த டைனோசர்கள் ஒவ்வொன்றாக உயிரை விட்டதை தொடர்ந்து அந்த டைனோசர் இனமே முற்றிலுமாக அழிந்து போயின.

டைனோசர்கள் அழிவை பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு பரபரப்பான தகவலையும் வெளியிட்டுள்ளனர்.

பூமியை தாக்க வந்த அந்த எரிக்கல் 30 வினாடிகளுக்கு முன்னதாக, அல்லது 30 வினாடிகளுக்கு பின்னர் பூமியில் விழுந்திருந்தால் டைனோசர் இனம் முற்றிலுமாக அழிந்திருக்காது.

ஏனெனில், பூமி அசுர வேகத்தில் சுற்றுக்கொண்டு இருப்பதால் பூமியை தாக்க வந்த அந்த எரிக்க 30 நிமிடம் தாமதாமாக வந்திருந்தால், அது மெக்ஸிகோ கடற்பகுதியில் விழுந்திருக்கும்.

அவ்வாறு கடற்பகுதியில் விழுந்திருந்தால் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்காது.

ஆனால், எரிக்கல் கடற்பகுதியில் விழுந்திருந்தால் டைனோர்கள் முழுமையாக அழிந்திருக்காது. இதன் விளைவு, தற்போது மனிதர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எரிக்கல் பூமியில் விழுந்ததும் 75 சதவிகித உயிரினங்கள் அழிந்து போயின. ஆனால், உலகின் மற்ற நிலப்பரப்பில் வாழ்ந்த சில பாலூட்டி இனங்கள் உயிர் பிழைத்ததால் இந்த பாலூட்டி இனத்தின் மூலமாக தான் மனிதன் தோன்றியுள்ளான் என பிபிசி எடுத்துள்ள அந்த ஆவணப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.