Connect with us
Cinemapettai

Cinemapettai

sona-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

14 வயதில் அறியாமல் செய்த தவறு.. இணையத்தில் கசிந்த பலான வீடியோ.. அதிர்ச்சியான சம்பவம்!

கேரளத்தை சேர்ந்த சோனா ஆபிரகாம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஃபார் சேல்’ என்ற மலையாள படத்தில் ஒரு பலாத்கார சீனில் நடித்திருந்தார். ஆனால் அந்தக் காட்சி ஆபாச வெப்சைட்டுகளில் படம் ரிலீஸ் ஆன சில மாதங்களிலேயே வெளியானது.

மேலும் இதைப்பற்றி சோனா தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் கண்ணீருடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதாவது அந்த படத்தில் நடித்தது பற்றி சோனா கூறும்போது, ‘அந்த படத்தில் நடிக்கும்போது எனக்கு 14 வயசு தான். 150க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் அந்த சீன்ல நடிக்க டைரக்டர் சதீஷ் அனந்தபுரி இடம் மறுத்தேன்.  ஆனால் அவர் என்னை சமாதானப்படுத்திதான் அந்த சீனில் நடிக்க வைத்தார்’ என்றும் கூறியுள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கை முடித்தபிறகு ஸ்கூலுக்கு படிக்க போய்விட்டாராம் சோனா. பிளஸ் டூ படிக்கும்போது அந்த படத்தில் வெளிவராத பலாத்காரக் சீன்கள் வெப்சைட்டில் வந்ததால் குடும்பத்தினர், சொந்தக்காரர்கள் அனைவருமே அவரை ஒரு மாதிரியாக பார்க்க தொடங்கினர் என்றும் குறிப்பிட்டுள்ளார் சோனா.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சோனா இந்த பலாத்கார சீன் பற்றி முதல்வர் டிஜிபி சைபர் கிரைம் போலீஸார் உட்பட பலரிடம் புகார் தெரிவித்தும் அந்த வீடியோ இன்னும் நீக்கப்படாமல் இருப்பதால் தற்கொலைக்கு கூட முயன்றதாக சோனா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருக்க தற்போது பெண்கள் அமைப்பினர் அனைவரும் இந்த விஷயத்தில் குரல் கொடுக்க தொடங்கியுள்ளார்கள். மலையாள திரையுலக சங்கமான அம்மா- வில் தற்போது இந்த விஷயம் பூதாகரமாக வெடித்துள்ளது.

மேலும் இதைப் பற்றி போலீசார் கூறுகையில் டைரக்டர் சதீஷ் அனந்தபுரிக்கு தெரியாமல் இந்த காட்சிகள் வெப்சைட்டில் வெளிவந்திருக்க முடியாது என்றும் ஆணித்தனமாக குறிப்பிட்டிருக்கின்றனர். மேலும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் சோனாவின் வீடியோவை நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர் கேரள போலீசார்.

இதனிடையே  சோனாவை பற்றி அதிர்ச்சியூட்டும் மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது. அதாவது சோனாவின் பெற்றோர்களின் முழு ஒப்புதலை பெற்று தான் சோனா அந்த மாதிரி காட்சியில்  நடித்தார் என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.

மேலும் எல்லாவற்றையும் மறைத்து விட்டு சோனா தற்போது வந்து புகார் அளித்துள்ளது ஏன் என்று கேரள போலீசார் சோனாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

sona-1

sona-1

Continue Reading
To Top