Connect with us
Cinemapettai

Cinemapettai

naga chaitanya samantha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்தக் காட்சி நடித்ததால் நொந்து போனேன்.. விவாகரத்து காரணத்தை கூறிய நாகசைதன்யா

தமிழ், தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அழகாக சென்று கொண்டிருந்த அவர்களுடைய திருமண வாழ்வில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அதனால் அவர்கள் இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விவாகரத்து பெறுவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர்.

இதனால் அவர்கள் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சமந்தா, நாக சைதன்யா விவாகரத்திற்கு பல காரணங்கள் ஊடகங்களில் சொல்லப்பட்டது. ஆனால் அது எதற்கும் நாக சைதன்யா பதில் அளிக்காமல் மவுனம் காத்தார்.

உண்மையில் அவர்கள் பிரிவுக்கு சமந்தா திரைப்படங்களில் அதிக கவர்ச்சியாக நடித்தது தான் காரணம். சமந்தா நடிப்பில் வெளியான பேமிலி மேன் வெப் சீரிஸ் பல சர்ச்சைகளை சந்தித்தது. இதில் சமந்தா படுக்கையறை காட்சியில் தைரியமாக நடித்திருந்தார்.

இதைப்பார்த்த நாக சைதன்யா மற்றும் அக்கினெனி குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமணத்திற்குப் பின் கண்ணியமாக நடிக்க வேண்டும் என்று விரும்பிய அவரது குடும்பத்தினரால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாக நாக சைதன்யா, சமந்தா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒருமுறை நாக சைதன்யா ஒரு பேட்டியில் தன்னுடைய குடும்பத்திற்கு சங்கடம் மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நான் எந்த ஒரு காட்சியிலும் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

அப்படிப்பட்டவர் சமந்தாவின் இந்த கவர்ச்சியான காட்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் பிரிவதற்கு முடிவெடுத்துள்ளார். இது தவிர தெலுங்கு நடிகைகள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது.

இதையெல்லாம் யோசித்து தான் நாக சைதன்யா தன் குடும்பத்துக்காக இந்த விவாகரத்து முடிவை எடுத்துள்ளார். தற்போது சமந்தா, நாக சைதன்யா இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஒரு ஐட்டம் சாங் ஆடி சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top