திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

லால் சலாமை விட எனக்கு அதுதான் முக்கியம்.. மகளிடம் ஒரே போடா போட்ட சூப்பர் ஸ்டார்

Lal Salaam Movie Updates: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் போன்றோரும் நடித்திருக்கிறார்கள். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிந்த நிலையில் ரஜினியிடம் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா போட்டு காண்பித்துள்ளார். படத்தில் சில காட்சிகள் மெதுவாக செல்வது போல் ரஜினி உணர்ந்திருக்கிறாராம். மகளிடம் சொல்லி அந்த காட்சிகளை எல்லாம் நீக்க சொல்லி இருக்கிறாராம்.

Also Read: ரஜினியின் 170 ஆவது படத்தின் டைட்டில் இதோ.. நிறைவேற போகும் சூப்பர் ஸ்டாரின் கனவு

மேலும் அந்த காட்சிகளை நீக்கினால் பக்காவாக படம் இருக்கும் என்று அறிவுரை கூறியிருக்கிறார். மேலும் லால் சலாம் படம் வெற்றி பெற்றால் தான் நீ சினிமாவில் ஜெயிக்க முடியும் என்று ரஜினி ஒரே போடாக போட்டிருக்கிறார். இதனால் முழுவிச்சாக ஐஸ்வர்யா இந்த படத்தில் பணியாற்றி வருகிறாராம்.

மேலும் ரஜினி சொன்ன காட்சிகளை இப்போது மாற்றி வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் மீண்டும் சில காட்சிகளை வேறு மாதிரி எடுக்கலாமா என்ற திட்டத்திலும் ஐஸ்வர்யா இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் ரஜினி எப்போதுமே ஒரு படம் வெற்றி பெறுமா என்பதை முன்கூட்டியே கணித்து விடுவாராம்.

Also Read: ஜெயிலர் படத்தை ஒரு வழி பண்ணிட்டு தான் விடுவாங்க போல.. விஜய், அஜித் பேரை சொல்லி சுத்தலில் விடப்பட்ட நெல்சன்

அந்த வகையில் ஜெயிலர் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை நெல்சன் இடம் கொடுத்திருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யாவிடம் தற்போது சில மாற்றங்கள் சொல்லி இருப்பதால் கொஞ்சம் பதட்டத்தில் இருக்கிறாராம். ஆனால் சினிமா தான் இனி தன்னுடைய முழு வேலை என இறங்கிவிட்டார் ஐஸ்வர்யா.

இதில் வெற்றி கண்டால் தான் அவரால் அடுத்தடுத்த படங்களை நம்பி எடுக்க முடியும். அதோடு மட்டுமல்லாமல் லால் சலாம் படம் ஒருவேளை கலவையான விமர்சனங்கள் பெற்றால் இதில் ரஜினியின் பெயரும் டேமேஜ் ஆக வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் மிகவும் எச்சரிக்கையாக தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காய் நகர்த்த வேண்டும்.

Also Read: 500 கோடி கொடுத்தாலும் உன் படத்துல நடிக்க முடியாது.. ஜெயிலர் மீது செம கடுப்பில் இருக்கும் விஜய்

- Advertisement -spot_img

Trending News