கேரள மாநிலத்தில், காதலை நிராகரித்த காதலியை தீவைத்து எரித்துவிட்டு காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டயத்தில் உள்ள மருத்துவ கல்லூரியை சேர்ந்த முன்னாள் மாணவர் ஆதர்ஷ்(26), அதே கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்த லட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஒரு சில காரணங்களால் லட்சுமி ஆதர்ஷின் காதலை நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆதர்ஷ் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

கல்லூரி வளாகத்தில் தனது தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த லட்சுமி மீது பெட்ரோல் ஊற்றியுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்து அலறியடித்து ஓடிய லட்சுமியை விடாது துரத்திய ஆதர்ஷ் அவர் மீது தீ வைத்துள்ளார். பின்னர் தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கல்லூரி வளாகத்திலேயே இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதிளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.