அவருக்கு நான் தான் ராசியான ஹீரோயின்.. ராசியில்லாத நடிகை என வெறுப்பேத்தும் விவாகரத்து நடிகை

சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஹீரோயின்களுக்கு எல்லா படமும் கை கொடுப்பதில்லை. என்னதான் வெற்றிப்பட நடிகையாக வலம் வந்தாலும் சில நேரங்களில் சறுக்கலை சந்திக்கும் நிலையும் ஏற்படலாம். அப்படி ஒரு விஷயம் தான் அந்த இளம் நடிகைக்கு தற்போது நடந்து இருக்கிறது.

தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தார் அந்த இளம் நடிகை. பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த அவரை தமிழில் மாஸ் நடிகருக்கு ஜோடியாக பிரபல தயாரிப்பு நிறுவனம் கமிட் செய்தது.

அதிலிருந்து பல நடிகைகளும் வயிற்றெரிச்சலில் பொங்க ஆரம்பித்துவிட்டனர். ஏனென்றால் மாஸ் நடிகருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது பல நடிகைகளின் கனவு. அதிலும் விவகாரத்து நடிகை மற்றும் வாரிசு நடிகை இருவரும் அவருடன் நடிக்க போட்டி போட்டு வந்தனர்.

இருந்தாலும் வாய்ப்பு அந்த இளம் நடிகைக்கு சென்றதில் விவாகரத்து நடிகைக்கு ஏக கடுப்பு. ஏனென்றால் திரையுலகில் யார் சிறந்தவர் என்பதில் இந்த இரண்டு நடிகைகளுக்கு தான் தற்போது கடுமையான போட்டி இருக்கிறதாம். தற்போது வெளியான மாஸ் நடிகரின் படம் அந்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை.

மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் தமிழில் நடிக்க வந்த அந்த இளம் நடிகை தற்போது ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு விட்டார். இதனால் விவாகரத்து நடிகை பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறாராம். மேலும் நான் தான் அந்த நடிகருக்கு ராசியான நடிகை என்று அவர் அந்த நடிகையை வெறுப்பேத்தி வருவதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Next Story

- Advertisement -