Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
காதலனை டீலில் விட்ட நடிகை.. ஈசிஆரில் பங்களா, வெளிநாட்டுக் கார் என சம்பாதிக்கும் போது எதுக்கு கல்யாணம்
சமீப காலமாக அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் முன்னணி நடிகைகளை எல்லாம் ஒரு மீடியம் சம்பளம் வாங்கும் நடிகை ஓரம் கட்டி வருகிறார். பார்ப்பதற்கு குடும்ப குத்து விளக்காக இருக்கும் அந்த நடிகைக்கு எந்த கேரக்டராக இருந்தாலும் செட் ஆகும்.
அந்த அளவுக்கு அவர் தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து விடுவார். தற்போது அவர் ஈசிஆரில் ஒரு பெரிய பங்களா கட்டிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அதிக விலையுயர்ந்த வெளிநாட்டு காரும் வாங்கி இருக்கிறார்.
இப்படி எக்கச்சக்கமாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் நடிகை தன்னுடைய காதலனை தற்போது கழட்டி விட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகை பல வருடங்களாக ஒருவரை காதலித்து வருகிறார். அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது.
ஆனால் இப்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் நடிகை திருமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறுகின்றனர். தற்போது கை நிறைய படங்களை வைத்திருக்கும் நடிகை அதில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறாராம்.
மேலும் இப்போது கை நிறைய சம்பாதிக்கும் போது கல்யாணம் எதற்கு என்று நடிகை யோசித்து வருகிறாராம். ஏனென்றால் திருமணம் ஆகிவிட்டால் இந்த அளவுக்கு சம்பாத்தியம் வருமா என்பது சந்தேகம் என்பதால் அவர் தற்போது காதலனை டீலில் விட்டிருக்கிறார்.
