வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஹனிமூன் போனது இருக்கட்டும் சூட்டிங் வாங்க.. படமே ஓடாமல் தவிக்கும் ஜெயம்ரவிக்கு இப்படி ஒரு தொந்தரவா!

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் கூட இப்போது ஒரு ஹிட் படத்துக்காக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நாம் எத்தனையோ நடிகர்களை சொன்னாலும் இந்த நடிகர் மட்டும் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருக்கிறார்.

அவர் வேறு யாருமல்ல தனி ஒருவன் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த ஜெயம் ரவி தான். இவர் தற்போது நடிகை நயன்தாராவுடன் இணைந்து இறைவன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஜெயம் ரவி மிகவும் டவுன் டைமில் இருக்கிறார்.

தற்போது அவர் நடித்து முடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அவர் அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார். இதனால் அவர் கைவசம் இருக்கும் படங்களை எல்லாம் விரைவாக நடித்து தள்ளும் யோசனையில் இருக்கிறாராம்.

ஆனால் அதற்கு நயன்தாராவால் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் புது பெண்ணான நயன்தாரா திருமணம் முடிந்த கையோடு தன் கணவருடன் ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டிற்கு பறந்து விட்டார். இதனால் இறைவன் திரைப்படம் இப்போது தாமதமாகி கொண்டிருக்கிறது.

அவர் வந்தால் தான் சில முக்கிய காட்சிகள் எடுத்து முடிக்க முடியும். அதனால் ஜெயம் ரவி மிகவும் ஆவலுடன் அவருடைய வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவும் வெளிநாட்டில் இசை கச்சேரிக்காக சென்று விட்டார்.

அவரும் எப்போது வருவார் என்று தெரியாத சூழ்நிலையில் ஜெயம் ரவி வெறிகொண்ட வேங்கையாக காத்துக் கொண்டிருக்கிறாராம். ஏற்கனவே அவருடைய மார்க்கெட் அதல பாதாளத்திற்கு சென்ற நிலையில் தற்போது இவர்களும் ஒரு தடையாக இருப்பது அவரை ரொம்பவே சோகத்தில் ஆழ்த்தி விட்டதாம்.

- Advertisement -

Trending News