Connect with us

Cinemapettai

பிரபல நடிகருடன் ஒரே படம்தான்.. சினிமாவை விட்டே ஓடிய இயக்குனர் தருண்கோபி!

tharungopi-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல நடிகருடன் ஒரே படம்தான்.. சினிமாவை விட்டே ஓடிய இயக்குனர் தருண்கோபி!

தமிழ் சினிமாவில் மாஸ் கமர்சியல் நடிகராக மாறிய விஷாலுக்கு அடிப்படையாக அமைந்ததே திமிரு படம்தான். பரபரப்பான கதை களத்தில் உருவான அந்த படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

திமிரு படத்தை இயக்கியவர் தான் தருண் கோபி. முதல் படமே பெரிய வெற்றியைப் பெற்றதால் தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.

இருந்தபோதிலும் மாயாண்டி குடும்பத்தார் எனும் படத்தில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மாயாண்டி குடும்பத்தார் படமும் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

திமிரு படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு, வேதிகா, சங்கீதா ஆகியோர் நடிப்பில் காளை என்ற படத்தை இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

இந்த படத்திற்கு பிறகு படம் இயக்கும் ஆசையே போய்விட்டதாக தெரிவித்துள்ளார். இருந்தாலும் தற்போது திமிர் 2 எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காளை படம் ஒன்றும் அவ்வளவு மோசமான படம் மாதிரி தெரியலையே!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top