Tamil Cinema News | சினிமா செய்திகள்
பழைய காதலருடன் ரூமில் நடந்த கூத்து.. தர்ஷன் பதிலால் அதிர்ச்சியான சனம் ஷெட்டி
தர்ஷன் தற்போது செய்தியாளரை சந்தித்து சனம் ஷெட்டி நேற்றைய தினம் கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ளார். சனம் ஷெட்டி சொல்றது எல்லாம் பொய் எல்லாத்துக்கும் என்கிட்ட ப்ரூஃப் இருக்கு என்று கூறியுள்ளார்.
சனம் செட்டி பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளிவந்ததால் எதற்கு இப்படி செய்கிறாய் என்று கேட்டேன், ஆனால் சனம் உன்னுடைய புரமோஷனுக்கு தான் என்று அவர் கூறினாராம்.
அதுமட்டுமல்லாமல் தனது எக்ஸ் பாய்பிரண்டுடன் பார்ட்டி மற்றும் இரவில் தங்கி இருந்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த நிகழ்வு பிக்பாஸில் தர்ஷன் இருக்கும் போது நடந்ததாம்.
சனம் செட்டி இதுவரை 5 லட்ச ரூபாய் செலவு செய்ததாகவும் அதில் மூன்று லட்ச ரூபாய் திருப்பி கொடுத்து விட்டதாக தர்ஷன் தெரிவித்துள்ளார். சனம் ஷெட்டி வெறுப்பதற்கு பல காரணங்கள் உள்ளது அதற்கான வீடியோ ஆதாரங்களை நான் காவல்துறையிடம் கண்டிப்பாக கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
சனம் செட்டியுடன் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட அவர் அதற்குப்பின் அவரது நடத்தை சரியில்லை என்று வெளிப்படையாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளது சினிமா நட்சத்திரங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது எப்படி அதிர்ச்சி சொல்றதுன்னு தெரியல சினிமா என்றாலே இதுபோன்ற கவர்ச்சி உடைகள், ஆண் நண்பர்கள் இருப்பது சகஜம் தான் இது எந்த அளவுக்கு உண்மை என்று போலீசார் விசாரித்தால் மட்டுமே தெரிய வரும்.
