Videos | வீடியோக்கள்
வெக்கங்கெட்ட கூமுட்டையாய் கலக்கும் கூகுள் குட்டப்பா.. கே எஸ் ரவிக்குமாரை பங்கம் செய்யும் ரோபோ
தர்ஷன் நடிப்பில் சபரி சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கூகுள் குட்டப்பன். இப்படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் ரோபோவை அழைத்து வந்து புரமோஷனை செய்தனர்.
மனிதனின் வாழ்வில் ரோபோ வந்தால் எந்த அளவிற்கு அந்த மனிதன் அதனுடன் நெருக்கமாகிறார். மேலும் இறுதியில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை வைத்து படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கேஎஸ் ரவிக்குமார் நடித்துள்ளார்.
தற்போது இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் ரோபோட் செய்யும் சேட்டைகள் கேஎஸ் ரவிக்குமார் பாசம் என முழு என்டர்டைன்மென்ட் ஆக படத்தை உருவாக்கி உள்ளனர். ரோபோ வைத்து படம் உருவாகி உள்ளதால் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
