Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் தர்ஷன் வெளியே வந்தவுடன் யாரை முதலில் சந்தித்தார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கண்டிப்பாக பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் எலிமினேட் செய்யப்பட்டது யாரும் எதிர்பாராத வகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் விஜய் டிவியை தர்ஷன் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். டுவிட்டரில் மாமாடிவி விஜய் டிவி என்ற ஹஷ்டக் ட்ரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷன், நேராக தனது காதலி சனம் ஷெட்டியை பார்க்க சென்றார். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, இந்த புகைப்படம் தனக்கு வருத்தத்தை அளிக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கண்டிப்பாக போக வேண்டிய வரை இடையில் அனுப்பியது வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது சோகமாக பதிவிட்டிருந்தார்.
புகைப்படம் கீழே:

tharsan
