Tamil Cinema News | சினிமா செய்திகள்
தர்ஷன் சனம் ஷெட்டி பிரிஞ்சதற்கு என்னோட குடும்பத்தை ஏன்டா திட்டுறீங்க.. கதறும் ஷெரின்
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து சில மாதங்கள் ஆகியும் இன்னும் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டியின் பிரச்சனைகள் ஓய்ந்தபாடில்லை. இவர்கள் இருவரும் பிரிந்ததற்கு நடிகை ஷெரின் தான் காரணம் எனவும் ஒரு கூட்டம் இன்னமும் கூறிக் கொண்டுதான் இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனும் ஷெரினும் கொஞ்சம் அப்படி இப்படி நடந்துகொண்டது உண்மைதான். மடியில் உட்காருவது ரொமான்ஸில் உருகுவது என பிக்பாஸ் வீட்டை பூங்காவாக மாற்றிவிட்டனர்.
அதே சமயத்தில் வெளியில் சனம் செட்டி அவர்களே மிஞ்சும் அளவுக்கு ஆண் நண்பர்கள் பழக்கம், பிகினி பேட்டி என தன் பங்குக்கு இணையதளங்களை டேமேஜ் செய்து வந்தார். தற்போது இருவருக்குள்ளும் முட்டிக் கொண்டது.
இருவரும் காதலை முறித்துக் கொள்வதாக பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தனர். ஆனால் இன்னமும் இவர்கள் இருவரின் காதலுக்கு இடைஞ்சலாக இருந்தது ஷெரின் தான் காரணமென அவரை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தையும் சேர்த்து திட்டி வருகின்றனர்.
இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார் ஷெரின். மேலும் தனக்கும் தர்ஷன்க்கும் தற்போது எந்த ஒரு சம்பந்தமும் இல்லை எனவும் என்னைப் பற்றி அசிங்கமாக பேசினாலும் எனக்கு எந்த ஒரு பிரச்சனை இல்லை எனவும் குடும்பத்தை அசிங்கமாக பேச வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

sherin
என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா!
