தாரை தப்பட்டை விமர்சனம் | Tharai Thappattai Review

 

Varalaxmi Sarathkumar, Sasikumar in Tharai Thappattai Movie Pong

பரதேசி படத்துக்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு பொங்கல் விருந்தாக ரிலீசாகியிருக்கும் படம் தாரை தப்பட்டை.

பொதுவாக ஊர்களில் நடக்கும் கரகாட்டம் எந்தளவுக்கு கவர்ச்சி ஆட்டமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த இயல்பை அப்பட்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் பாலா.

தஞ்சாவூர் பின்னணியில் நடக்கும் கதையில் சசிக்குமார் நடத்தும் ஒரு கரகாட்டக் குழுவின் ஆட்டக்காரியாக வருகிறார் வரலட்சுமி.

பாலாவிடம் உதவியாளராக பணிபுரிந்த சசிக்குமார் முதல் முறையாக அவருடைய இயக்கத்தில் ஹீரோவாகியிருக்கிறார். வழிக்காத தாடி, நீளமான தலைமுடி என கெட்டப்பில் தனி கவனத்தை செலுத்தியிருக்கிறார்.

செழியனின் ஒளிப்பதிவில் தஞ்சாவூரின் மண் வாசனையை ஸ்கிரீனில் மிக அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

இளையராஜாவின் 1000-மாவது படமென்பதால் இப்படத்தின் பாடல்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்றாற் போல் மீண்டும் தனது கிராமத்து இசையால் வசியப்படுத்துகிறார் பாடல்களிலும், பின்னணி இசையிலும் இசைஞானி இளையராஜா.

சைகோ மாதிரி எடுக்க வேண்டும் என்பதற்காகவே எடுத்துருக்கிறார் பாலா .சாரி பாலா ..வேற ட்ரை பண்ணுங்க ..

Rating: 2 / 5