3 பேரும் ரிஜெக்ட் பண்ண கதையில் விஜய்.. நாலு வருடமாய் ஹச் வினோத்துக்கு அல்வா கொடுத்த தளபதி

தளபதி 69 படத்தை ஹச் வினோத் இயக்குகிறார். இதை ட்ரிப்பில் ஆர் படத்தை தயாரித்த கே வி என் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இதுதான் விஜய் யின் கடைசி படம் என்கிறார்கள். ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கிய கோட் படம் நன்றாக இல்லை என கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கிறது.

சதுரங்க வேட்டையிலிருந்து, துணிவு வரை வித்தியாசமான கதைகளை இயக்கும் வினோத் இப்பொழுது விஜய்யின் கடைசி படத்திற்காக பல புதிய தொழில்நுட்பங்களை செய்யப் போகிறாராம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

விஜய் கையில் தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு நிற்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இது அரசியல் கலந்த கதைக்களமாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர். அடுத்த வருடம் அக்டோபர் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்றும் அறிவித்து வருகிறார்கள்.

நாலு வருடமாய் ஹச் வினோத்துக்கு அல்வா கொடுத்த தளபதி

ஏற்கனவே விஜய் மெர்சல் நடித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே இந்த கதையை வினோத் கூறியிருக்கிறார். ஆனால் அப்பொழுது இருந்த பிசியான காலகட்டத்தில் விஜய்யால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பின் வினோத் வேற படங்களில் பிஸியாகி விட்டார்.

தளபதி 69 கதையை ஏற்கனவே விஜய் சேதுபதி, தனுஷ், மற்றும் கமல் ஆகியோரிடம் எச் வினோத் கூறியிருக்கிறார். ஆனால் அவர்களும் இழுத்தடித்ததால் வெவ்வேறு படங்களுக்கு சென்று விட்டார் வினோத். இப்பொழுது தளபதி 69 ஆக இந்த கதை தயாராக உள்ளது.

- Advertisement -spot_img

Trending News